விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேது, நீயும் உன் அப்பாவும் சேர்ந்து ஏதாவது திட்டம் போட்டு இருந்தால் சும்மா விடமாட்டேன் என்று மிரட்டினார். குழந்தை காணாமல் போன விஷயத்தை அறிந்து தமிழ் செல்வி கதறி அழுதார். வீட்டில் உள்ள எல்லோருமே ஆறுதல் சொன்னார்கள். தமிழ் செல்வியால் ஏற்றுக்கொள்ளவில்லை. குழந்தை எனக்கு வேண்டும். எப்படியாவது என் குழந்தையை கொடுங்கள் என்று பதறிக் கொண்டிருந்தார். பின் ஹாஸ்பிடலில் சிசிடிவி கேமராவை போலீஸ் செக் பண்ணுகிறார்கள். அதில் ஒரு கிழவி குழந்தையை கடத்திக் கொண்டு போன விஷயம் தெரிகிறது. இதை அறிந்த சேது கொந்தளித்தார்.

சேது, கருப்பு இருவருமே அந்த கிழவினுடைய புகைப்படத்தை எடுத்துக் கொண்டு குழந்தையை தேடி அலைகிறார்கள். இன்னொரு பக்கம் ஹாஸ்பிடல் வந்த தமிழ்ச்செல்வி நடந்ததை எல்லாம் தெரிந்து கொண்டு குழந்தையை தேடி அலைந்தார். ஒரு பக்கம் போலீசும் குழந்தையை தேடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருமே கஷ்டப்பட்டு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. மனம் உடைந்து போன தமிழ்ச்செல்வி வீட்டிற்கு வந்தார்.
சின்ன மருமகள்:
குழந்தை கிடைக்கவில்லை என்று சேது சொன்னார். அதைக் கேட்டு ராஜாங்கம், எல்லோருமே பதறினார்கள். ஈஸ்வரி மட்டும் சந்தோஷப்பட்டார் கருப்பு, உனக்கும் அந்த குழந்தைக்கும் தான் சம்பந்தமில்லை. எதற்காக குழந்தையை கேட்கிறார்? என்று சேது வம்பு இழுப்பது போலவே பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கொந்தளித்த சேது, கருப்புவின் சட்டையை பிடித்து அது என்னுடைய குழந்தை தான் இது. இதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

சீரியல் ட்ராக்:
வீட்டில் உள்ள எல்லோருமே ராஜாங்கம் ரொம்பவே சந்தோஷப்பட்டார் அப்போது கருப்பு, குழந்தை எங்கும் போகவில்லை. கெஸ்ட் ஹவுஸில் தான் இருக்கிறது என்று சொன்னார். பின் மொத்த குடும்பமுமே கெஸ்ட் ஹவுஸ் போனார்கள். குழந்தையை பார்த்தவுடன் சேது எமோஷனலாக அழுதார். பின் குழந்தையை தன் கையில் தூக்கி கொஞ்சினார். இதை பார்த்து ராஜாங்கம், கருப்பு எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள்.

சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் தன்னுடைய குழந்தை திரும்ப வேண்டும் என்று கேட்டு தமிழ்செல்வி பஞ்சாயத்து வைக்கிறார். சேது, குழந்தையை அவர் பெற்றிருந்தாலும் அது எனக்கும் தான் குழந்தை. என் மகனை நான் விடமாட்டேன். எனக்கு வேண்டும் என்று சொல்கிறார். இது தரப்பில் உண்மையிலேயே காரசாரமாக விவாதம் நடக்கிறது.






