விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் சேதுவின் அத்தை வேண்டும் என்று தமிழ்செல்வியை பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்தார். இதை கேட்டு சேது கோபப்பட்டு சென்று விட்டார். இன்னொரு பக்கம் தமிழ்செல்வியின் பள்ளி தோழன், டெம்போவில் ஏற சொன்னார். தமிழ் செல்வி, அவருடைய தோழியுமே ஏறி சென்றார்கள். இன்னொரு பக்கம் ஆறுமுகம் தன் அக்காவிற்கு உடல்நிலை சரியில்லாததால் ஹாஸ்பிடல் போனார். மருத்துவர்கள், அவருடைய உடல்நிலை மோசமாக இருக்கிறது. சீக்கிரம் ஆப்ரேஷன் செய்யணும். லட்ச கணக்கில் பணம் தேவை என்பதால் ஆறுமுகத்திற்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

இதை அறிந்த ராஜாங்கத்தின் மகள் தன்னுடைய அப்பாவிடம் ஆறுமுகம் அக்காவின் ஆபரேஷனுக்கு உதவி செய்ய சொன்னார். பின் சேது வீட்டிலேயே வைத்துக் குடித்தார். இதை பார்த்து தமிழ் செல்வி, ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு சேது, நான் அப்படிதான் செய்வேன். என் விருப்பம் என்று தெனாவட்டாக பேசி இருந்தார். அதற்கு பின் தமிழ் செல்விக்கு உடம்பு முடியாமல் வாந்தி எடுத்து மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதை பார்த்த சேது பதறி அடித்துக்கொண்டு தமிழ்செல்வியை தன் மடியில் வைத்து எழுப்பினார். ஆனால், தமிழ்செல்வி எழவில்லை.
சின்ன மருமகள் சீரியல்:
நேற்று எபிசோட்டில் ராஜாங்கம் வீட்டிற்கு வந்த போலீஸ், செல்லப்பாண்டி உங்கள் பெயரை சொல்லி மோசடி வேலை செய்தது உண்மை என்று நிரூபணம் ஆகிவிட்டது. இந்த வழக்கில் உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று அறிவித்து விட்டார்கள் என்று சொன்னார். இதைக் கேட்டு ராஜாங்கம் குடும்பமே சந்தோஷப்பட்டது. அதற்கு பின் தமிழ்ச்செல்வி படிக்கும் கல்லூரி விழாவிற்கு ராஜாங்கம், சேது இருவருமே சிறப்பு விருந்தினராக சென்றார்கள். அங்கு ராஜாங்கம், கல்லூரி மாணவிக்கு உதவியாக ஸ்கூட்டி வாங்கி தருவதாக ஒத்துக்கொண்டார்.

நேற்று எபிசோட்:
அது மட்டும் இல்லாமல் அவர், வருடம் வருடம் தேர்வில் முதல் மதிப்பெண் பெரும் மாணவருக்கு இலவச கல்லூரி கட்டணம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தார். இதனால் கல்லூரியில் உள்ள மாணவர்கள் எல்லோருமே சந்தோஷப்பட்டார்கள். இன்னொரு பக்கம் தமிழ்ச்செல்வியின் பள்ளி தோழன் தமிழ்ச்செல்வியின் தோழியை காதலிக்கிறார். இது தெரியாமல் அவருடைய நண்பர் தமிழ்ச்செல்வியை தான் காதலிக்கிறார் என்று புரிந்து கொண்டார். பின் இதைப்பற்றி சேதுவின் அத்தை வைத்திருக்கும் ஆளிடம் அந்த நபர் தவறாக சொல்லி விட்டார். இதை அவர்களுமே வீடியோ எடுத்து விட்டார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தமிழ்செல்வியை அழைத்த கல்லூரி பேராசிரியர், நீ எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கிறாய் என்பது எனக்கு தெரியும். நல்லபடியாக மதிப்பெண் எடுத்து உனக்கான பீஸை நீயே கட்டிக் கொள். நீ நன்றாக படிக்கும் மனைவி என்று தெரியும் என அறிவுரை எல்லாம் சொல்கிறார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வியின் பள்ளி தோழன், தமிழ்ச்செல்வியின் தோழி இடம் போனில் கடலை போட்டுக் கொண்டிருக்கிறார். இதை அறியாமல் சேது அவரை பார்த்து முறைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், சேது அந்த நபரை அடித்தாரா? இல்லையா? என்ன செய்தார்? என்று தெரியவில்லை.

சீரியல் ட்ராக்:
உடனே சேது வீட்டில் ராஜாங்கம் மகள் கண்மணிக்கு பெண்பார்க்கும் விஷயமாக பேசுகிறார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே மாப்பிள்ளை வீட்டில் வருவதால் தடபுடலாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், கண்மணிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமே இல்லை. கண்மணி வீட்டில் வேலை செய்யும் ஆறுமுகத்தை தான் காதலிக்கிறார். இருந்தாலும் பெற்றோர்கள் சொன்னதால் தயாராகி வருகிறார். மாப்பிள்ளை வீட்டாருக்கு கண்மணியை பிடித்துப் போய் விட்டதாக சொல்கிறார்கள். அப்போது மாப்பிள்ளை அப்பா, எனக்கு ஒரே கண்டிஷன் தான். கல்யாணத்தை எளிமையாக செய்ய வேண்டும். ஒரே வாரத்தில் கல்யாணத்தை முடித்து இருவரையும் ஃபாரின் அனுப்ப வேண்டும் என்று சொல்கிறார். இதனால் ராஜாங்கமும் சம்மதிக்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் கண்மணி ஆறுமுகத்தை பார்த்து தவிக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






