விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் தமிழ் செல்வி வீட்டிற்கு வக்கீல் நோட்டீஸ் வந்தது. அதை பார்த்தவுடன் தமிழ்ச்செல்வி பெரிதாக கண்டு கொள்ளவே இல்லை. இதை நான் எதிர்பார்த்ததுதான் என்று சொன்னார். இதை நோட்டீஸ் அனுப்பிய விஷயத்தை தெரிந்தவுடன் தமிழ்ச்செல்வியின் அம்மா, அப்பா, பாட்டி எல்லோருமே ஷாக் ஆனார்கள். பின் தமிழ்ச்செல்வி, நல்ல வக்கீல் பாருங்கள். எனக்கு அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை. நான் டாக்டர் ஆவது தான் என்னுடைய ஒரே லட்சியம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தார்கள். தமிழ்செல்வி முதல் நாள் தன்னுடைய கல்லூரிக்கு சென்றார்.

அங்கு அவருக்கு தோழி கிடைக்கிறார். முதல் நாளிலேயே அவர் வகுப்பறையில் மயங்கி முதல் அப்போது அவர் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தன்னுடைய ப்ரொபஷரிடம் சொன்னார். அந்த ப்ரொபசரும் தமிழ்செல்வியை பாராட்டி இருந்தார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி கேன்டினில் தன்னுடைய தோழியுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது தமிழ்செல்வியுடன் படித்த பள்ளி நண்பர் ஒருவர் அங்கு கடை வைத்திருந்தார். தமிழ்செல்வியை பார்த்தவுடன் அவர் ஆனந்தத்தில் சந்தோஷமாக பேசி இருந்தார். தமிழ்செல்வியும் அவருடன் நன்றாக பேசி இருந்தார். இதை எல்லாம் சேதுவின் அத்தை அத்தை வைத்திருக்கும் ஆள் வீடியோவாக எடுத்தார்.
சின்னமருமகள் சீரியல்:
அதற்குப்பின் அந்த நண்பர், தன்னுடைய நண்பர்களிடம் தமிழ்ச்செல்வியை பற்றி பேசி இருந்தார். அப்போது அவர், நான் பள்ளி பருவத்தில் அவளை காதலித்தேன். என் காதலை சொல்ல முடியவில்லை. இப்போது அவள் தனியாகத்தான் இருக்கிறாள் என்றார். இன்னொரு பக்கம் சேதுவின் அத்தை, தமிழ்ச்செல்வி தன்னுடைய ஆண் நண்பருடன் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் வீடியோவை சேதுவிடம் காண்பித்தார். அதை பார்த்தவுடன் சேது பயங்கரமாக கோபப்பட்டு குடிக்க போனார். அப்போது சேதுவை பார்த்த சிலர், இவன் இப்படியே குடித்துக் கொண்டிருப்பதால் தான் இவன் பொண்டாட்டி வேறு ஒருவனுடன் சென்று விட்டாள் என்று மோசமாக தமிழ்செல்வியை பேசி இருந்தார்கள். இதனால் சேது கோபப்பட்டார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் சேதுவின் வீட்டில் பரஸ்பர விவாகரத்து வாங்கி தர வேண்டும் என்று வக்கீலை தமிழ் செல்வின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். அங்கு தமிழ்ச்செல்வி இடம் வக்கீல் விவாகரத்துக்கு சம்மதமா? என்று கேட்டார். அதற்கு தமிழ் செல்வி, விவாகரத்துற்கு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். எனக்கு கணவன் இல்லை என்றாலும் பரவாயில்லை. நான் கர்ப்பமாக இருக்கிறேன். எனக்கு குழந்தை பிறக்கும்போது அந்த குழந்தைக்கு அப்பா வேண்டும் என்று சொன்னார். அதை வக்கில், சேது அப்பாவிடம் சொன்னார்கள். இதனால் வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆனார்கள்.
https://www.youtube.com/watch?v=9eTY2fpxkrM
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் தமிழ்ச்செல்வியின் அப்பா செல்லப்பாண்டி ராஜாங்கத்தின் பெயரைச் சொல்லி ஊர் முழுக்க கடன் வாங்கி இருக்கிறார். இதை அறிந்த போஸ், கடன் கொடுத்தவரிடம் சேதுவின் அப்பா ராஜாங்கத்தின் மீது கம்ப்ளைன்ட் கொடுங்கள். அதற்காக நான் பணம் தருகிறேன் என்று சொல்கிறார். அதற்காக அந்த கடன் கொடுத்த நபர் ராஜாங்கத்தின் மீது புகார் கொடுக்கிறார். பின் இதைப் பற்றி செல்லப்பாண்டிக்கு தெரிய வருகிறது. இதனால் கொந்தளித்த தமிழ்ச்செல்வி, அந்த மனுஷன் கௌரவத்திற்கு எந்த கலங்கமும் வரக்கூடாது. அதற்கு என்ன பண்ண முடியுமோ பண்ணுங்கள் என்று சொல்லுகிறார். இன்னொரு பக்கம் செல்லப்பாண்டி செய்த வேலை ராஜாங்கத்திற்கு தெரிகிறது. அதோடு புகார் அளித்த விஷயத்தை அறிந்த சேதுபதி, செல்லப்பாண்டி மொத்த குடும்பத்தையும் பழி வாங்க கொந்தளிக்கிறார்.






