விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள்’ சீரியலில் ஊரில் உள்ள எல்லோருமே கிடா விருந்துக்கு போவதாக பேசி கொண்டார்கள். இதை அறிந்த தமிழின் அம்மா தமிழிடம் சொல்லி புலம்பி இருந்தார். அதற்கு தமிழ்செல்வி, என்ன நடந்தாலுமே இந்த மொய் விருந்தை நடத்துவேன் என்று சபதம் போட்டார். இதை அறிந்தும் சேது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கிடா விருந்துக்கான வேலை மும்முரமாக நடந்தது. இதெல்லாம் பார்த்து தமிழ் செல்விக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. சோகத்தில் தமிழ்ச்செல்வி, எனக்கு தெரிந்த ஆசிரமம் இருக்கிறது. அங்கு சாப்பாடு கொண்டு போய் கொடுத்துவிடலாம் என்று சொன்னார்.

கோவிலில் கிடா விருந்துக்கான ஆட்டை சாமி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கோயில் பூசாரி, தயவு செய்து இந்த கிடா விருந்தை விட்டு விடுங்கள். இதை மீறி செய்தால் உங்கள் குடும்பத்திற்கு தான் பிரச்சனை என்று சொல்வதால் கிடா விருந்தையே நிறுத்தி விட்டார்கள். அதற்கு பின் ஊர் மக்கள் எல்லோருமே தமிழ் செல்வி நடத்தும் மொய் விருந்துக்கு போனார்கள். அதை பார்த்து தமிழ்ச்செல்வி ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் எல்லோருக்குமே தமிழ்செல்வி சந்தோஷமாக சாப்பாட்டை பரிமாறி இருந்தார். அனைவரும் தமிழ்ச்செல்வியை பாராட்டி தங்களால் முடிந்த பண உதவியை கொடுத்து இருந்தார்கள். அதற்குப்பின் சேதுவின் அப்பத்தா, அம்மா, அண்ணி மூவருமே மொய் விருந்திற்கு வந்தார்கள்.
சின்னமருமகள் சீரியல்:
அப்போது அப்பத்தா, நீ சொன்ன பொய்தால்தான் குடும்பமே இப்படி இருக்கிறது என்று தமிழ்செல்வியை திட்டினார். அதற்குப்பின் மூவரும் சந்தோஷமாக மொய் விருந்து சாப்பிட்டு முடித்து தங்க வளையல், செயின், பணம் என்று வைத்தார்கள். இதை பார்த்த தமிழ்ச்செல்வி, இது எதுவும் எனக்கு வேண்டாம். என்னை உங்கள் பேரன் ரொம்ப மோசமாக திட்டிய போது நீங்கள் எதுவுமே பேசவில்லை என்று எமோஷனலாக பேசினார். பின் அவர்கள் கொடுத்த நகைகளை கொடுத்து விட்டார். அதற்குப்பின் சேதுவின் அண்ணி கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்க, இந்த பணத்தை நீ வாங்கவில்லை என்றால் உனக்கும் எனக்குமான உறவு முடிந்து விடும் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் சேதுவின் அண்ணி கொடுத்த பணத்தை தமிழ்ச்செல்வி வாங்கிக் கொண்டார். பின் அப்பத்தா, என்னால் நிம்மதியாக தூங்கவே முடியாது. தயவுசெய்து என்னிடம் இருந்து ஏதாவது வாங்கிக் கொள் என்று சொன்னார். உடனே தமிழ் செல்வி , உங்கள் சுருக்குப்பையில் இருக்கும் பணத்தை கொடுங்கள் போதும் என்றார். இன்னொரு பக்கம் சேது குடும்பம் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தார்கள் . அங்குள்ள உறவினர் சாப்பிட்டு விட்டு தான் செல்ல வேண்டும் என்று அவர்களை உட்கார வைத்து விட்டார். பின் வீட்டில் உள்ள பெண்கள் சமைக்கவே இல்லை என்று சொன்னார்.

சீரியல் ட்ராக்:
இதனால் அவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. உடனே அந்தப் பெண், தமிழ்ச்செல்வி சமைத்த சாப்பாட்டை காசு கொடுத்து வாங்கி வந்தார். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி சமைத்த சாப்பாடு என்று தெரியாமல் சேதுவின் வீட்டில் உள்ள எல்லோருமே சாப்பிட்டு ஆஹா ஓஹோ என்று பாராட்டி இருந்தார்கள். அதற்குப்பின் அப்பத்தாவிடம் சேது, நீங்கள் மொய் விருந்துக்கு போனீர்களா? என்று விசாரித்தார். அப்பத்தா, ஆமாம் போனேன். நீ சாப்பிட்ட சாப்பாடு கூட தமிழ் செல்வி செய்து தந்தது தான் என்று சொன்னவுடன் சேது வாந்தி எடுப்பது போல செய்து கொண்டிருந்தார். பின் பணம் கொஞ்சம் குறைவாக இருப்பதால் கருப்பு சேதுவை சந்தித்து தன்னுடைய சம்பள பாக்கியை வாங்கி கொண்டு தமிழ்செல்வியிடம் கொடுத்தார்.
https://www.youtube.com/watch?v=ABbqnzy9Z38
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தமிழ்ச்செல்வி, அவருடைய அம்மாவும் பணத்தை கல்லூரியில் கட்டுவதற்காக வந்து கொண்டிருக்கிறார்கள். வரும் வழியில் திருடர்கள் அவருடைய பணத்தை பிடுங்கி கொண்டு செல்கிறார்கள். அந்த வழியாக வந்த சேது, திருடர்களை அடித்து அந்த பணத்தை வாங்கி தமிழ்செல்வியின் அம்மா கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார். பின் தமிழ்ச்செல்வி நல்லபடியாக கல்லூரியில் பணத்தை கட்டுகிறார். அங்கு இருப்பவர்கள் நீங்கள் இனி டாக்டர் டாக்டருக்கு படிக்கலாம் என்று சொன்னதைக் கேட்டு தமிழ்செல்வி ரொம்பவே சந்தோஷப்படுகிறார்.






