ஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘சின்ன மருமகள்’. சீரியலில் உண்மையிலேயே தமிழ் செல்வி கர்ப்பமாக இருக்கிறார். இந்த சந்தோஷத்தை சேதுவிடம் தமிழ் செல்வி சொல்கிறார். ஆனால், சேது அந்த குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று ரொம்ப கேவலமாக தமிழ் செல்வியை பேசி விடுகிறார். இதனால் பொங்கி எழுந்த தமிழ்ச்செல்வி, இனி நீ எனக்கு கணவனும் இல்லை. நான் உனக்கு மனைவியும் இல்லை. என் குழந்தையை வளர்த்து என்னால் தனியாளாக நின்று சாதிக்க முடியும் என்று சவால் விட்டு அங்கிருந்து வருகிறார்.

பின் வீட்டிற்கு வந்தவுடன் தன்னுடைய தந்தை, தன்னுடைய மாமனாரின் பெயரை சொல்லி பணம் வாங்கி குடித்து அழித்தது தெரிந்தது. இதனால் கோபப்பட்ட தமிழ்செல்வி, தன்னுடைய தந்தையிடமும் சண்டை போட்டார். பின் அவர், எனக்கு கணவனும் தேவையில்லை, தந்தையும் தேவையில்லை. என்னால் குழந்தையும் வளர்த்துக் கொண்டு என்னுடைய ஆசைப்பட்ட டாக்டர் படிப்பையும் படிப்பேன் என்று சவால் விட்டார். தமிழ்செல்வி, மருத்துவ கல்லூரிக்கு கட்டணம் கட்டுவதற்கு ஒரு லட்ச ரூபாய் பணம் தேவைப்படுகிறது.
சின்னமருமகள் சீரியல்:
இதனால் அவருடைய அம்மா, எல்லா இடத்திலுமே பணத்தை கடனுக்கு கேட்டார். ஆனால், யாருமே பணம் தரவில்லை. தமிழ்செல்வியின் குடும்பத்தை ரொம்ப மோசமாகத்தான் பேசி இருந்தார்கள். இதனால் தமிழ்ச்செல்வியும் அவருடைய அம்மாவும் ரொம்ப வருத்தப்பட்டார்கள். அதற்குப்பின் தமிழ்ச்செல்வி, மொய் விருந்து வைக்கலாம். அதன் மூலம் பணத்தை எப்படியாவது ரெடி பண்ணலாம் என்று யோசித்து ஊர் முழுக்க போஸ்டர் ஓட்டினார். பின் தமிழ்ச்செல்வி மொய் விருந்து நடத்துகிறார் என்பதை அறிந்த சேதுவின் அத்தை, தமிழ்ச்செல்வியை பழிவாங்க கிடா விருந்து நடத்த தன்னுடைய அண்ணனிடம் கேட்டார்.

நேற்று எபிசோட்:
அவருமே கிடா விருந்துக்கு ஏற்பாடு செய்ய சொன்னார். ஊரில் உள்ள எல்லோருமே கிடா விருந்துக்கு போவதாக பேசி கொண்டார்கள். இதை அறிந்த தமிழின் அம்மா தமிழிடம் சொல்லி புலம்பி இருந்தார். அதற்கு தமிழ்செல்வி, என்ன நடந்தாலுமே இந்த மொய் விருந்தை நடத்துவேன் என்று சபதம் போட்டார். இதை அறிந்தும் சேது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கிடா விருந்துக்கான வேலை மும்முரமாக நடந்தது. இதெல்லாம் பார்த்து தமிழ் செல்விக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. சோகத்தில் தமிழ்ச்செல்வி, எனக்கு தெரிந்த ஆசிரமம் இருக்கிறது. அங்கு சாப்பாடு கொண்டு போய் கொடுத்துவிடலாம் என்று சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் கோவிலில் கிடா விருந்துக்கான ஆட்டை சாமி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் கோயில் பூசாரி, தயவு செய்து இந்த கிடா விருந்தை விட்டு விடுங்கள். இதை மீறி செய்தால் உங்கள் குடும்பத்திற்கு தான் பிரச்சனை என்று சொல்வதால் கிடா விருந்தையே நிறுத்தி விடுகிறார்கள். அதற்கு பின் ஊர் மக்கள் எல்லோருமே தமிழ் செல்வி நடத்தும் மொய் விருந்துக்கு போகிறார்கள். அதை பார்த்து தமிழ்ச்செல்வி ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் எல்லோருக்குமே தமிழ்செல்வி சந்தோஷமாக சாப்பாட்டை பரிமாறுகிறார். அனைவரும் தமிழ்ச்செல்வியை பாராட்டி தங்களால் முடிந்த பண உதவியை கொடுத்து இருக்கிறார்கள். அதற்குப்பின் சேதுவின் அப்பத்தா, அம்மா, அண்ணி மூவருமே மொய் விருந்திற்கு வருகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது அப்பத்தா, நீ சொன்ன பொய்தால்தான் குடும்பமே இப்படி இருக்கிறது. எதற்காக இப்படி எல்லாம் செய்தாய் என்று தமிழ்செல்வியை திட்டுகிறார். அதற்குப்பின் சந்தோஷமாக மொய் விருந்து சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டு முடித்து மூவருமே தங்க வளையல், செயின், பணம் என்று வைத்திருக்கிறார்கள். இதை பார்த்த தமிழ்ச்செல்வி, இது எதுவும் எனக்கு வேண்டாம். என்னை உங்கள் பேரன் ரொம்ப மோசமாக திட்டிய போது நீங்கள் எதுவுமே பேசவில்லை. அதுதான் எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று எமோஷனலாக பேசுகிறார். பின் அவர்கள் கொடுத்த நகைகளை கொடுத்து விடுகிறார். அதற்குப்பின் சேதுவின் அண்ணி கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்கிறார். அதற்கு அவர், இது நான் சம்பாதித்த பணம். இந்த பணத்தை நீ வாங்கவில்லை என்றால் உனக்கும் எனக்குமான உறவு முடிந்து விடும் என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






