வைரலாகும் அர்ஜுனின் நிச்சயதார்த்த புகைப்படம் – அர்ஜுன் மடியில் இருப்பது யார் தெரியுமா ? பலரையும் சோகத்தில் ஆழ்த்தியவர்.

0
2558

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்ற பட்டத்துடன் பல ஆண்டுகளாக பிரபல நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அர்ஜீன் தற்போது வேண்டுமானால் நடிகர் தனுஷ் தென்னகத்தின் புரூஸ்லி என்ற பட்டப் பெயரை எடுத்து இருக்கலாம். ஆனால் 90 ஸ் காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவின் புரூஸ்லி என்று பெயரெடுத்தவர் நடிகர் அர்ஜுன் தான். 1984ஆம் ஆண்டு நன்றி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அர்ஜுன், அதன் பின்னர் தமிழ் தெலுங்கு கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து இருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்தி வருகிறார். நடிகர் அர்ஜுன் ஆயிரத்து தொள்ளாயிரத்து 88 ஆம் ஆண்டு நிவேதிதா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

மேலும், இந்த தம்பதியருக்கு மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் அர்ஜுனின் நிச்சயதார்த்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைடபத்தை அர்ஜுனின் உறவினரும் நடிகையுமான அனு பிரபாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படத்தில் அர்ஜுன் மடியில் குழந்தையாக அமர்ந்து இருக்கும் நபர் வேறு யாரும் இல்லை. அர்ஜுனின் மருமகனும் நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா தான்.

- Advertisement -

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்த சிரஞ்சீவி சார்ஜுன் உயிரிழந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்த மேக்னா ராஜ்ஜின் கணவரும், நடிகர் அர்ஜுனின் மருமகனும் தான் கன்னட நடிகருமான சிரஞ்சீவி சர்ஜா. ஜூன் 6 ஆம் தேதி சிரஞ்சீவி சர்ஜா தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று நெஞ்சுவலியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. பின் உடனடியாக இவரை மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை.

அவர் இறந்த போது அவருக்கு 39 வயது தான் ஆகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை 22 படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக ‘ஷிவார்ஜுனா’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது மேக்னா ராஜ் கற்பாக இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.இப்படி ஒரு நிலையில் மேக்னா ராஜிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.மறைந்த தனது மருமகன் சிரஞ்சீவிக்கு பிறந்த மகனை வீடியோ கால் மூலமும் பார்த்து ரசித்தார் அர்ஜுன்.

-விளம்பரம்-
Advertisement