தென்னிந்திய சினிமா திரை உலகில் 1980 முதல் 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ராதிகா சரத்குமார். ராதிகா அவர்கள் தமிழ் சினிமாவில் 80களில் இருந்து தொடங்கி இன்று வரை இடைவிடாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறி நடித்து வருகிறார். மேலும், சினிமா துறையில் தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கியவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி கமல், விஜயகாந்த் என்று பல்வேறு நடிகர்களுடன் நடித்துவிட்டார் ராதிகா.
இவர் பிரபல சன் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, வாணி ராணி,செல்வி, அரசி என பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார். கடைசியாக அவர் சந்திரகுமாரி என்ற சீரியலிலும் நடித்து உள்ளார். ஆனால் ராதிகாவிற்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தந்தது சித்தி சீரியல் தான். இந்த சீரியலிலை ராதிகா சரத்குமார் அவர்களே தயாரித்து இருந்தார். அது மட்டுமில்லாமல் முதல் முறையாக பட்டி தொட்டி எல்லாம் வெற்றி அடைந்த சீரியலும் இது தான்.
தற்போது 22 வருடங்களுக்கு பிறகு “சித்தி 2” சீரியல் சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டு உள்ளது. இந்த சித்தி 2 சீரியலை கே.விஜயன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் ராதிகா, பொன்வண்ணன், ரூபினி, நிஷாந்தி (பானுப்பிரியாவின் தங்கை), டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் இந்த தொடரில் இருந்து விலகினார் ராதிகா. அதே போல இந்த தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த காயத்ரி சமீப காலமாக தொடரில் காணப்படவில்லை . இப்படி ஒரு நிலையில் சீரியலுக்காக போட்ட லுக் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பதிவு செய்து மீண்டும் சீரியலில் நடிக்க தொடங்கியிருப்பதை ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார்.