‘காக்க காக்க’ ஷூட்டிங்கில் சூர்யாவிற்கு லவ் லெட்டர் கொடுத்த பிரபலம் ஜோதிகா என்ன சொல்லியுள்ளார் பாருங்க. வீடியோ இதோ.

0
551
surya
- Advertisement -

ஜோதிகா முன்னாடியே சூர்யாவுக்கு காதல் கடிதம் கொடுத்தேன் என்று பிரபல பெண் நடன இயக்குனர் கூறியிருக்கிற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடன இயக்குனராக திகழ்பவர் பாபி. இவர் சினிமாவில் மிகப் பிரபலமான நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டருடன் உதவியாளராக இருந்தார். அதுமட்டுமில்லாமல் நிறைய சினிமாக்களில் நடன உதவியாளராக பணியாற்றி இருக்கிறார். அப்படி இருக்கும் போது சூர்யா நடித்த படத்தில் உதவி இயக்குனராக பாபிக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் இது தான் சரியான சமயம் என்று பாபி தைரியத்தை வரவைத்து லவ் லெட்டரை சூர்யாவிடம் கொடுத்திருக்கிறார். இதை பாபியே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியிருப்பது, நான் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே சூர்யாவை ரொம்ப பிடிக்கும். சூர்யாவை பார்த்துவிட முடியாதா? அவரிடம் பேச முடியாதா? என்று பல நாட்கள் ஏங்கிருக்கிறேன். அப்படி இருக்கும்போது காக்க காக்க படத்தில் பிருந்தா மாஸ்டர் உதவியாளராக நான் பணிபுரிந்தேன். அப்போது ஒருநாள் ‘என்னை கொஞ்சம் மாற்றி’ என்ற பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள். சூர்யாவும், ஜோதிகாவும் ஜீப்பில் வரும் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் ஒரு பேப்பரில் சூர்யா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நான் உங்களை காதலிக்கிறேன் என்று எழுதி மன தைரியத்துடன் சூர்யாவிடம் சென்றேன்.

- Advertisement -

பாபி அளித்த பேட்டி:

பின் உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று சூர்யாவிடம் கூறினேன். அதற்கு சூர்யா, சொல்லுங்க பாபி என்ன விஷயம்? என்று கேட்டார். தைரியத்துடன் அப்போது நான் அவரிடம் லெட்டரை நீட்டினேன். உடனே இதில் என்ன இருக்கு? என்று சூர்யா கேட்டார். நான் உங்களை லவ் பண்றேன் சார். இதுல எழுதி இருக்கிறேன் என்று சொன்னேன். அதை கேட்டு சூர்யா, அங்கிருந்த கேமராமேன், ஜோதிகா, பிருந்தா மாஸ்டர் உட்பட அனைவரும் ஒரு நிமிஷம் திகைத்து விட்டனர். பின் சூர்யா, சாரி பாவி நான் ஜோதிகாவை லவ் பண்றேன் என்று சிரித்தபடியே கூறினார்.

சூர்யாவிடம் காதல் சொன்ன பாபி:

உடனே ஜோதிகா, என்ன பாபி கொஞ்சம் முன்னாடி சொல்லி இருக்கலாம் இல்ல என்று என்னை கிண்டல் செய்தார். அதற்கு நான், இப்போது ஒன்றும் பிரச்சனை இல்லை. நான் சூர்யாவை காதலிக்கிறேன். நீங்கள் என் கூடவே வந்து விடுங்கள் என்று சூர்யாவிடம் நான் விளையாட்டாக சொன்னேன் என்று கூறி இருந்தார். இப்படி இவர் பேசிய தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் சிறந்த ஜோடிகளாக திகழ்பவர்களில் சூர்யா- ஜோதிகாவும் ஒருவர். இவர்கள் இருவரும் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-

சூர்யா-ஜோதிகா காதல் முதல் கல்யாணம்:

இவர்கள் இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்து இருக்கிறார்கள். அப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பின் பல வருடங்களுக்கு பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா தன்னுடைய குடும்பத்தை கவனிப்பதினால் சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டார். பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி, பொன்மகள் வந்தாள் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

சூர்யா-ஜோதிகா திரை பயணம்:

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த உடன் பிறப்பே படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. அதே போல் சூர்யாவும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும், அதிக வசூல் ரீதியாகவும் அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் ஜெய் பீம் படம் இடம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement