தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சியாலும் கடுமையான உழைப்பாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது.

அதோடு தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக சிவா இருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சிவா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் அமரன். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்தது.
சிவகார்த்திகேயன் திரைப்பயணம்:
இதை அடுத்து இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சிவா அவர்கள் சுதா கொங்காரா இயக்கத்தில் sk25 என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை Dawn Pictures and Red Giant Movies Pictures இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலிலா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிகப் பொருட்செலவில் வரலாற்று திரைப்படமாக இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் டைட்டில்:
இந்த படத்திற்கு ‘பராசக்தி’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இது சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவில் அறிமுகமான பராசக்தி படத்தின் டைட்டில் தான். இதே டைட்டிலை விஜய் ஆண்டனி தன் படத்திற்கு பெயர் வைத்து இருக்கிறார். ஆனால், பராசக்தி டைட்டிலை ஏவிஎம் நிறுவனம் சிவகார்த்திகேயனுக்கு கொடுத்ததாக அறிவித்து இருக்கிறது. இதற்கிடையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமில்லாமல் இவர் சிபி சக்கரவர்த்தி படத்திலும் நடிப்பதாக கூறியிருக்கிறார்.
டான் கூட்டணி விலகல்:
இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்திலிருந்து சிவகார்த்திகேயன் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சிவகார்த்திகேயன்- சிபி சக்ரவர்த்தி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்தில் இருந்து பிரிந்து விட்டதாகவும், இந்த கூட்டணியில் படம் இனி தொடங்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது சிபி சக்கரவர்த்திக்கு பதிலாக வேறொரு இயக்குனரை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தேடி வருகிறது.

பிரிவிற்கு காரணம்:
அதுமட்டுமில்லாமல் சில பேரிடம் சிவா கதைகளை கேட்டு வருகிறாராம். கூடிய விரைவிலேயே சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தினுடைய இயக்குனர் யார்? என்பதை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் டான். இந்த படத்தின் மூலம் தான் சக்கரவர்த்தி இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். முதல் படத்திலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.






