முதலாளியைத் தொழிலாளி வெளியில் அனுப்புகிற கூத்து எங்காச்சும் நடக்குமா? – ஓயாத டப்பிங் யூனியன் பஞ்சாயத்து.

0
178
- Advertisement -

டப்பிங் யூனியனுக்கு நீண்ட காலமாக தலைவராக இருந்தவர் ராதாரவி. இதனால் டப்பிங் யூனியனுக்கு தலைவர் தேர்தல் நடைபெற இருப்பதாக சில மாதங்களுக்கு முன் அறிவித்து இருந்தார்கள். இதில் ராதாரவியும், ராஜேந்திரனும் போட்டியிட்டார்கள். கடந்த மார்ச் மாதம் தான் தேர்தல் நடைபெற்றது. மேலும், தேர்தலில் ராதாரவி அணி வெற்றி பெற்றது. இதனால் ராதாரவியை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரனை யூனியிலிருந்து நீக்க இருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ராஜேந்திரன் கூறியிருப்பது, எந்த ஒரு சங்கம் என்றாலும் அதில் ஜனநாயகம் இருக்க வேண்டும். டப்பிங் யூனியன் வரலாற்றில் இதற்கு முன்பு நிர்வாகிகள் போட்டி பலமுறை நடந்தது. இந்த முறை அதை மாற்றி இருக்கிறோம். அண்ணன் ராதாரவி போட்டியிடவில்லை என்று தெரிந்ததும் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன் என்று அறிவித்தேன். ஆனால், அதற்குப் பிறகு என்ன நினைத்தாரோ திடீரென்று அவர் போட்டியிடுவதாக அறிவித்தார்.

- Advertisement -

ராஜேந்திரன் பேட்டி:

இருந்தாலும் நான் பின்வாங்கவில்லை. தேர்தலின் போது கூட நிறைய தில்லுமுல்லு வேலை நடந்தது. ஒரு வழியாக தேர்தலும் முடிந்து அவர்கள் யூனியனே ஜெயித்து விட்டார்கள். ஜெயித்து வெற்றி பெற்றார்களே இனிமேலாவது ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யலாம் என்று நினைக்கணும். அதை விட்டுவிட்டு பழிவாங்கும் எண்ணத்துடனே அலைகிறார்கள். சங்கத்துக்கு எதிராக நடந்தேன் என்று என் மீது நடவடிக்கை எடுக்கிறார்களாம். தேர்தலில் போட்டியிடுவது எப்படி சங்கத்துக்கு எதிரான நடவடிக்கை? விளக்கம் கேட்டு எனக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். நான் பதில் அனுப்பிவிட்டேன்.

-விளம்பரம்-

டப்பிங் யூனியன் குறித்து சொன்னது:

இருந்தாலும், இது யூனியன் என்றாலும் தொழிலாளர் நலத்துறைக்கும் அப்படியே முதல்வர் செல்லுக்கும் யூனியன் எடுக்கும் நடவடிக்கை குறித்து ஒரு தகவலும் கொடுத்து விட்டேன். மொத்த யூனியன்களில் எப்படியோ தெரியவில்லை. டப்பிங் யூனியன் பொறுத்தவரை உறுப்பினர்களை யூனியனில் இருந்து நீக்க முடியாது. காரணம், யூனியனில் சேர்ந்த உறுப்பினர்கள் ஒவ்வொருத்தவரும் ஒன்றரை லட்சம், இரண்டு லட்சம் பணம் கட்டி சேர்கிறார்கள். அவர்கள் கட்டின அந்த பணத்திலேயே அவர்கள் வாங்குற சம்பளத்தில் இருந்து தர கமிஷனில் தான் யூனியனே இயங்கிக் கொண்டிருக்கிறது.

ராஜேந்திரன் ஆதங்கம்:

அதனால் இங்க இருக்குற உறுப்பினர்கள் தான் முதலாளி. அவர்கள் பணத்தில் யூனியனை நடத்திட்டு இருக்கிற நிர்வாகிகள் அவர்களுடைய தொழிலாளர்கள். முதலாளியை தொழிலாளி வெளியில் அனுப்பிய கூத்து எங்கையாவது நடக்குமா? என் பணத்தை வாங்கி செலவு செய்து விட்டு என்னையே வெளியில் போக சொல்வீர்களா? என்னுடைய விளக்கத்திலும் இதை தான் சொல்லி இருக்கேன். என்னை பொறுத்தவரை இதற்கு முன் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஆனால், இப்போ என்னை மட்டும் இல்லை இனிமேல் ஒருத்தரை கூட யூனியிலிருந்து நீக்க முடியாத படி செய்யணும். அதுக்கு என்ன செய்யணுமோ அதை செய்யப் போகிறேன்.

சின்மயி குறித்து சொன்னது:

மேலும், எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக தொழிலாளர் துறைக்கு புகார் அனுப்பி இருந்தேன். இது தொடர்பாக விளக்கம் கேட்ட தொழிலாளர் துறை நடவடிக்கை கைவிடும்படி அறிவுறுத்தி இருக்கிறது. இப்படித்தான் பாடகி சின்மயியை யூனியனில் இருந்து வெளியேற்றினார்கள். அந்த பொண்ணு என்ன டப்பிங் பேசாமல் இருக்கா? சமீபத்தில் வெளியான லியோ படத்தில் கூட பேசினாங்க. நடிகர் அரவிந்த்சாமி படத்துக்கு டப்பிங் பேசினார். யூனியனில் உறுப்பினரா? இல்லாமல் அவர் எப்படி பேசலாம் என்று சொன்னார்கள். நான் பேச கூடாதுன்னு எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுங்கன்னு அவர் கேட்க எல்லோரும் தெறிக்க ஓடிவிட்டார்கள். ஒரு யூனியனில் ஒற்றுமையாக இருந்து உறுப்பினர்களுக்கு நல்லது செய்யணும். அதை விட்டுவிட்டு வேண்டாத வேலைகளை தான் எப்பவும் செய்து கொண்டு இருக்கிறது டப்பிங் யூனியன் என்று பேசி இருக்கிறார்.

Advertisement