கலைஞரின் வீட்டில், கலைஞர் கையால் தாலி கொடுத்து திருமணம் செய்த பிரபல காமெடி நடிகர்.!

0
274
karunagaran-actor

தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு’ படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் கருணாகரன். அதன் பின்னர் பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.

kalaingar

நடிகர் கருணாகரனுக்கும், மறைந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களுக்கும் ஒரு நெருங்கிய பந்தம் இருந்தாக தெரிகிறது . அதற்கு முக்கிய உதாரணமாக நடிகர் கருணாகரனின் திருமணத்தை சொல்லலாம். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னாள் நடிகர் கருணாகரன், பிபிஓ நிறுவனத்தில் பணிபுரிந்த போது அங்கே தென்றல் என்பவரை காதலித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தனது காதலி தென்றலை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவரது திருமணத்தை மண்டபத்தில் நடைபெறாமல், மறைந்த திமுக தலைவர் கலைஞர் வீட்டில் தான் நடிகர் கருணாகரனின் திருமணம் நடைபெற்றுளளது. கலைஞரின் வீட்டில்,அவரது முன்னணிலையில் தான் கருணாகரன் தனது காதலியான தென்றலுக்கு தாலி கட்டியுள்ளார். அந்த திருமணத்தின் போது ஸ்டாலின் அவர்களும் மணமகளுக்கு வாழ்த்து மடலை கூட வாசித்துள்ளார்.

karunanidhi

அதற்கு பின்னர்தான் ஒரு திருமண மண்டபத்தில் ரிஷப்பனை வைத்துள்ளார் நடிகர் கருணாகரன். அந்த விழாவில் பல்வேறு நடிகர் நடிகைகளும் கலந்துகொண்டு இருந்தனர். தற்போது நடிகர் கருணாகரன், கலைஞர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சினிமா வாழ்க்கை :-

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கிய பல்வேறு குறும் படங்களில் நடித்துவந்தார் நடிகர் கருணாகரன். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான இவரது குறும் படத்தை பார்த்த இயக்குனர் சுந்தர் சி , இவருக்கு ‘கலகலப்பு’ படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார்.

அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்து வந்த நடிகர் கருணாகரன் ரஜினி, அஜித், விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்துள்ளார். தற்போது தமிழில் அரை டஜன் படங்களுக்கு மேல் கையில் வைத்துள்ளார் நடிகர் கருணாகரன்.