சிவகார்த்திகேயன் நடிச்ச முதல் படம் ‘தல அஜித்’ கூடத்தான் ! எந்த படம் தெரியுமா ?

0
7800

தல அஜித் திரையில் பார்ப்பதைத் தாண்டி அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்பதை நாம் அவரது ரசிகர்கள் பலர் கூறக் கேட்டிருப்போம். சமீப காலமாக இதனை பல நடிகர்களும் கூறி வருகின்றனர். தன்னுடன் நடிக்கும் பல துணை நடிகர்களுக்கு உதவி செய்வது அஜித்திற்கு வழக்கமான ஒரு பழக்கம் ஆகும்.
சூட்டிங்கில் தன்னுடன் நடிக்க வரும் புது நடிகர் நடிகைகளை அவரை பார்த்து பிரமித்து போய் இருப்பார்கள். அப்படியாக அவரைப் பார்த்து பதட்டப்படும் நடிகர்களிடம் அவரே வந்து பேசி அவர்களின் பதட்டத்தை தணிப்பார்.

இப்படி தான், கடந்த 2008ல் வந்த தலயின் ‘ஏகன்’ படத்தில் ஒரு சின்ன ரோலில் நடிகர் சிவா கார்த்திகேயன் நடித்தார், அதில் தல அஜித்துக்கு ஸ்பையாக நடித்திருப்பார்.ஒரு நாளில் தலயுடன் இருந்து நடித்ததில் சில அனுபவங்களை கூறினார். அவர் கூறியதாவது,

- Advertisement -

இதையும் படிங்க: இவர் மட்டும் இல்லை என்றால், நான் இல்லவே இல்லை – சிவகார்த்திகேயன் உருக்கம் !

நான் முதலில் படப்பிடிப்பிற்கு சென்றவுடன் சற்று பதட்டமாக இருந்தேன். அவருக்கு திரையில் ஏன் இவ்வளவு வரவேற்ப்பு என அஜித் சாரை பார்த்ததும் தான் தெரிந்தது. அப்படி ஒரு தேஜஸ் அவரது முகத்தில். நான் பதட்ட மாக இருந்ததை அறிந்த அவரே என்னிடம் வந்து பேசினார்.
நாம் என்ன செய்கிறோம் என்பதையும் தெரிந்து வைத்திருப்பார் அஜித். நாம் நன்றாக வாழ்கிறோமா என்பதை எல்லாம் விசாரிப்பார். என்னிடமும் வீட்டில் எல்லாம் என்ன செய்கிறார்கள்? வாழ்க்கை நன்றாக போகிறதா? பணத்தை சேர்ர்த்து வையுங்கள், அது மிக முக்கியம், அதிகமாகி சேர்த்தால் மற்றவர்களுக்கு உதவியும் செய்யுங்கள் எனக் அன்புடன் விசாரித்தார் தல அஜித்.

-விளம்பரம்-

அவ்வளவு பெரிய ஸ்டார் என்னிடம் வந்து என்னுடன் உட்கார்ந்து அப்படி அன்பாக உபசரிப்பது அவர் ஒருவர் தான் நினைக்கிறேன் என மனம் நெகிழ தல அஜித்தைப் பற்றிக் கூறினார் சிவா காத்திகேயன்.

Advertisement