இதுபோன்ற காட்சிகள் தவறான முன் மாதிரியாகிடும் – பாக்கியலட்சுமி சீரியல் மீது காவல் அலுவகத்தில் புகார்.

0
572
baagyalakshmi
- Advertisement -

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் கணவராக சதீசும் நடித்து வருகிறார்கள். மேலும், இல்லத்தரசிகளின் பேவரட் சீரியலாக இந்த தொடர் திகழ்கின்றது. இது குடும்ப பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-62.png

சீரியலிலும் இப்படி ஒரு காட்சி :

இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தற்போது இந்த தொடரில் பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார். இதனால் பள்ளி மாணவி ஒருவர் வீட்டில் சொல்வதற்கு பயந்து தற்கொலை செய்து கொள்கிறார். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் அந்த பெண் தேர்வுக்குப் பயந்துதான் இந்தமாதிரி தவறான முடிவு எடுத்துவிட்டார் என்று ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் பொய்யான தகவலை கூறுகிறார்கள்.

- Advertisement -

காவல் அலுவலகத்தில் புகார் :

இப்படி இந்த மாதிரி காட்சிகள் தான் பாக்கியலட்சுமி தொடரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இது போன்று காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது கண்டனத்துக்குரியது என சமூக ஆர்வலர் முகமது கோஷ் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, பொதுவாகவே தற்கொலை என்பது தவறான ஒன்று. அதிலும் பள்ளி படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்வது மிக மிக தவறு.

பாக்கியலட்சுமி

இது மிகவும் முட்டாள்தனமாக இருக்கிறது :

எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. இதை நாம் பிள்ளைகளுக்கு வலியுறுத்தி சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் இதுபோன்று நடக்கும் பாலியல் கொடுமைகளை பற்றி தைரியமாக பெற்றோர்களிடமும் சொல்லவில்லை என்றால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கலாம் என்று பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து இருக்கோம். இந்த சூழலில் பாலியல் தொல்லை காரணமாக ஒரு பெண் தற்கொலை செய்துகொள்வதாக சீரியலில் காட்டியிருக்கிறார்கள். இது மிகவும் முட்டாள்தனமாக இருக்கிறது.

-விளம்பரம்-

மன ரீதியாக பலவீனம் அடைந்து விடுவார்கள் :

இது மாதிரியான பிரச்சனைக்கு அரசு toll-free எண் கொடுத்திருக்கிறார்கள். அதில் நம்ம பிரச்சனையை பதிவு பண்ணலாம் என்று சீரியலில் காண்பித்து இருந்தால் உண்மையாகவே படிக்கும் மாணவிகளுக்கு அது தைரியம் கொடுக்கும் வகையில் இருக்கும். இப்போது இருக்கிற எல்லா குழந்தைகளிடமும் போன் இருக்கு. அதனால் அவர்கள் போனில் எல்லாத்தையும் பார்த்துகொண்டு இருக்கிறார்கள். மேலும், இது போன்ற காட்சிகள் அவர்களுக்கு முன்மாதிரியாகி விடும். அதோடு அவர்கள் மன ரீதியாக பலவீனம் அடைந்து விடுவார்கள். அதுமட்டுமில்லாமல் இதுபோன்று முன்பு கல்யாண வீடு சீரியல் தவறாக ஒரு காட்சி எடுத்தார்கள் என்று சன் டிவிக்கு அபராதம் விதித்து இருந்தார்கள்.

பாக்கியலட்சுமி

சிக்கலில் சிக்கிய கல்யாண வீடு சீரியல் :

ஒரு வாரத்துக்கு அந்த சீரியல் ஆரம்பிக்கும்போது 30 வினாடிகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று Broadcasting Content Complaints Council உத்தரவிட்டது. பொதுவாகவே சீரியல்களுக்கு என்று ஒரு கட்டுப்பாடும் விதிமுறை இருக்கு. ஏதோ சீரியல் பண்ணனும் என்று பண்ணக்கூடாது.இப்போது இருக்கும் சமுதாயத்தில் இதுபோன்ற பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் மாணவிகளுக்கு தைரியம் தைரியமாகவும் அவர்கள் பெற்றோர்கள் இடம் சொல்லனும் என்பதை வலியுறுத்தியும் வர நோக்கில் காட்சிகள் வரவேண்டும். அதை விடுத்து பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை பண்ண மாதிரி காட்சிப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

கொஞ்சம் கூட சமூக அக்கறை இல்லை :

கொஞ்சம் கூட சமூக அக்கறை இல்லாமல் இதுபோன்ற காட்சிகள் எடுத்து ஒளிபரப்புகிறார்கள். அது ஒருநாள் ஓட முடிவதில்லை. இதைத்தொடர்ந்து அதிகமாக சோசியல் மீடியாவில் வரும். இதனால் இதை பார்க்கும் மாணவிகளும் முன்னுதாரணமாக மாறிவரும். அதனால் அந்த காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இவரின் புகார் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு விஜய் டிவி நிறுவனம் என்ன பதிலளிக்கப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement