பூஜை அறையே இல்லாத மாரி செல்வராஜ் வீடு – அதற்கு பதிலாக என்ன இருகிறது தெரியுமா ? காரணத்தை கேட்டு வியந்துள்ளா உதயநிதி

0
2507
Mariselvaraj
- Advertisement -

மாரி செல்வராஜ் வீட்டின் பூஜை அறையில் இருக்கும் படங்கள் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றிப் படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மாமன்னன். உதயநிதி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பஹத் பாசில் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது.

-விளம்பரம்-

பொதுவாக மாரி செல்வராஜ் படங்களில் விலங்குகளின் மூலம் சில குறியீடுகளை ஒலித்து வைப்பார். பரியேறும் பெருமாளின் நாய், கர்ணனின் கழுதை போல மாமன்னன் படத்தில் பன்றியை குறியீடாக வைத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் நாயகன், பன்றி மீது ஆர்வம் கொண்டவராகவே மாரி செல்வராஜ் காண்பித்து இருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜுக்கு 50 லட்சம் மதிப்பிலான மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக வழங்கி இருந்தார் உதயநிதி.அப்போது கூட உதயநிதி தனது பன்றியின் உருவம் பதித்த சட்டையை அணிந்து சென்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் வீட்டில் பூஜை அறை இல்லையாம். அவர் எந்த கடவுளையும் வழிபடவே மாட்டாராம். அதற்கு பதிலாக பன்றிகளின் புகைப்படங்களை தான் அவர் வைத்துள்ளாராம். உதயநிதி ஸ்டாலின் கூட இதை பார்த்துவிட்டு, என்ன சார் நிறைய பன்றிகளின் புகைப்படத்தை வெச்சுருக்கீங்க என கேள்வி கேட்டாராம். இதற்கு பதிலளித்த மாரி ‘ஆமாம் சார் எனக்கு பன்றிகள் தான் ரொம்ப புடிக்கும்’ என கூறியதாக தகாவால் வெளியாகியுள்ளது.

மேலும், சமீபத்தில் அளித்த பேட்டியில் படத்தில் விலங்குகளை பயன்படுத்திய காரணம் குறித்து மாரி செல்வராஜ் கூறியிருந்தது, பரியேறும் பெருமாள் படத்தில் வரும் கருப்பி என்ற நாய் முதலில் படம் முழுவதும் வருவது கிடையாது. கதைப்படி கறுப்பி இறந்துவிடும். ஆனால், என்னால் அதை அப்படியே விட்டுவிட முடியவில்லை.அந்த சீனை எடுத்துவிட்டு எடிட் செய்த பார்த்தபோது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

-விளம்பரம்-

அதனால் அந்த நாயை தினமும் படப்பிடிப்புக்கு கொண்டு வந்து விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். என்னுடைய உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் குழப்பமாக இருந்தது. படத்தில் தான் நாய் இறந்து விட்டதே! எதற்காக இவர் தினமும் அந்த நாயை படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டுவர சொல்கிறார் என்று நினைத்தார்கள். ஆனால், நான் படப்பிடிப்பில் சும்மா இருக்கும் நேரம் எல்லாம் நாயை வைத்து ஷாட்களை எடுத்துக் கொண்டே இருப்பேன்.

ஆனால், கிளைமாக்ஸில் நாய் மீண்டும் எழுகிறது என்பதை நான் படப்பிடிப்பு இறுதியில் தான் முடிவு செய்தேன். நாயை நான் எடுக்க எடுக்க கருப்பியும் பரியனும் ஒன்றுதான் என்பது எனக்கு புரிந்தது. இறுதியில் கருப்பி வந்து பரியனை எழுப்புவது போன்ற காட்சி எடுத்தேன். என்னை சுற்றி இருந்தவர்கள் இது சினிமா தனமாக இருக்காதா? என்றெல்லாம் கேட்டார்கள். எப்படி இறந்த நாய் வரும் என்று கேட்டார்கள். நான் எமோஷனலாக உண்மையாக இருந்தால் அது ஒர்க் அவுட் ஆகும் என்று சொல்லி தான் எடுத்தேன். பலரும் இது குறித்து பல கேள்விகளை என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

பின் நான் நாயின் வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி முழுவதுமாக நீளமாக மாற்றினேன். அதனால் படத்தில் அது நீளமாக மாறும். என்னுடைய சினிமாவையே நான் அங்கு தான் கண்டுபிடித்தேன். எந்த மாதிரியான படங்களை எடுக்கலாம் என்று இதன் மூலம் தான் நான் கண்டுபிடித்தேன். எழுத்துக்கும் இயக்கத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் நான் உணர்ந்தேன். இதையே என்னுடைய அடுத்த படமான கர்ணனில் தொடர்ந்தேன் என்று கூறியிருந்தார்.

Advertisement