யூடியூபரை மிரட்டியதாக எழுந்த புகார் – சிறுத்தை சிவா தம்பி பாலாவுக்கு போலீசார் சம்மன். பின்னனி இதான்.

0
1557
- Advertisement -

வீடியோக்களை நீக்க சொல்லி youtuberயை மிரட்டிய வழக்கில் நடிகர் பாலாவிற்கு போலீசார் சம்மன் அனுப்பி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். பின் இவர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

பின் சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவு இல்லை. இதனால் இவர் மலையாள மொழிக்கு சென்று விட்டார். பின் நீண்ட இடைவெளிக்கு பின் இவர் அஜித்தின் வீரம் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். தற்போது இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதோடு இவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி ஆவார். இதனிடையே நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி அம்ருதாவை ரொம்ப காலமாக காதலித்து வந்தார்.

- Advertisement -

பாலா திருமணம்:

பின்னர் இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அவந்திகா என்ற ஒரு மகள் இருக்கிறார். பின் இவர் அம்ருதாவை 2019 ஆம் ஆண்டு விவாகரத்து விட்டார். அதன் பின் பாலா கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் சில மாதங்களுக்கு முன் நடிகர் பாலா அவர்கள் கல்லீரல் பாதிப்பு தொடர்பான நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

பாலா உடல்நிலை:

இதனால் இவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தார்கள். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலாவுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவந்தனர். சிகிச்சைக்கு முன் தான் உயிர் பிழைப்பேனா மாட்டானா என்று பாலா உருக்கமுடன் பேசி இருந்தார். சிகிச்சைக்கு பின் பாலா உடல்நலம் தேறி இருக்கிறார். தற்போது பாலா குணம் அடைந்து இருக்கிறார். இந்த நிலையில் போலீஸ் பாலாவிற்கு சம்மன் அனுப்பி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

போலீஸ் விசாரணை:

அதாவது, பாலா குறித்த வீடியோக்களை செகுதான் என்ற பெயரில் அஜு அலெக்ஸ் என்ற youtube வெளியிட்டு இருக்கிறார். இதனை அறிந்த பாலா யூடியூபரையும் அவருடைய நண்பர் முகமது அப்துல் காதர் என்பவரையும் கடந்த வாரம் நேரில் சந்தித்து மிரட்டி இருக்கிறார். இதனால் முகம்மது அப்துல் காதர் போலீசில் பாலா மீது புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், வீடியோக்களை நீக்கவில்லை என்றால் கடுமையான விளைவுகளை நீங்கள் சந்திப்பீர்கள் என்று பாலா மிரட்டி விட்டு எங்களுடைய வீட்டை சேதப்படுத்தி சென்றிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

போலீஸ் அனுப்பிய சம்மன்:

மேலும், இது தொடர்பாக பாலாவை தொடர்பு கொண்டு போலீசார் பேசியதற்கு பாலா தன் மீது இருந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். பின் பாலா சோசியல் மீடியாவில் யூடியூபர் அத்துமீறி நடந்து கொண்டதால் அதற்கான விளைவை சந்தித்து இருக்கிறார் என்று பதிவிட்டு இருக்கிறார். இதனால் போலீஸ் பாலாவிற்கு சம்மன் அனுப்பி இருக்கிறது.

Advertisement