தங்கை வீட்டு விசேஷம், திருவண்ணாமலை வரை சென்று தனது தாய் மாமன் கடமையை செய்த கிங் காங். அழகிய புகைப்படம் இதோ.

0
1856
Kingkong
- Advertisement -

தமிழ் சினிமா உலகின் மிக பிரபலமான நகைச்சுவை நடிகர் கிங் காங். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதுமட்டும் இல்லாமல் இவருடைய உண்மையான பெயர் பாதி பேருக்கு தெரியாது. நடிகர் கிங் காங் உடைய உண்மையான பெயர் ‘சங்கர்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்து வெற்றி நடை போட்ட ‘அதிசய பிறவி’ என்ற படத்தின் மூலம் தான் நடிகர் கிங் காங் அவர்கள் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் கிங் காங் ஆடிய டான்ஸ் இப்போது பார்த்தால் கூட சிரிப்பை அடக்க முடியாது. அந்த அளவிற்கு தூளாக இருந்தது.

-விளம்பரம்-

பிறகு தான் நடிகர் கிங் காங் அவர்களுக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் நிறைய வந்து குவிந்தன. இதுவரை இவர் ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் தன்னுடைய நடிப்பு திறனால் மக்களிடையே பாராட்டுகளை பெற்றவர். மேலும், இவர் நடித்த படங்களின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றவர்.

- Advertisement -

கிங் காங் செய்த சாதனை:

இவர் அதிகமாக காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலுடன் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் பயங்கரமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் சிரித்து சிரித்து வயிறு வலிக்கும் அளவிற்கு இவரின் காமெடி இருக்கும். மேலும், நடிகர் கிங் காங் அவர்கள் 1990 கால கட்டங்களில் தமிழ் சினிமா உலகில் பிரபலமான கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார்.

டாக்டர் பட்டம் :

அதோடு நடிகர் கிங் காங் அவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூரில் உள்ள ஒரு பல்கலை கழக கல்லுரில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து சினிமாவில் இவருடைய நடிப்புத் திறனுக்காக தேசிய விருது வழங்கி உள்ளார்கள். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கிங் காங் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதோடு தனது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளையும் பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

தங்கை பிள்ளைகளின் காது குத்து :

அந்த வகையில் சமீபத்தில் இவரது தங்கை பிள்ளைகளுக்கு சிகை நீக்கி காது குத்தும் விழா நடைபெற்று உள்ளது. தனது தங்கை பிள்ளைகளுக்கு தாய் மாமன் என்ற முறையில் திருவண்ணாமலைக்கு நேரில் சென்று தனது கடமையை முடித்துள்ளார் கிங் காங். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ‘திருவண்ணாமலை மாவட்டம் வரதராஜபுரம் கிராமம் குலதெய்வம் முனீஸ்வரர் கோயில் திருவிழா மற்றும் தங்கச்சி மகன் காதனி விழா சிறப்பாக நடைபெற்றது’ என்று பதிவிட்டுள்ளார்.

கிங் காங்கின் குடும்பம் :

இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கிங் காங் தனது மகனுடன் கலந்து விளையாடி இருந்தார். அதே போல இவரது மகள்களில் ஒருவரான கீர்த்தனா சமீபத்தில் தான் சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைகழகத்தில் பிகாம் முடித்து பட்டம் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement