தலைவருக்காக எழுதிய முதல் பாடல் என் உயிர் உலகிற்காக எழுதிய பாடல் – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி

0
1434
- Advertisement -

ஜெயிலர் படத்தில் விக்னேஷ் சிவன் பாடல் எழுதியது குறித்த காரணம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ரஜினி நடித்த ஜெயிலர் படம் குறித்து தான் ட்ரெண்டிங் ஆக சென்று கொண்டு இருக்கிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கிளி அரவிந்த், இயக்குநர் கேஎஸ் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள். இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

- Advertisement -

ஜெயிலர் படம்:

இந்த படம் இந்த மாதம் பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அதிலும் இந்த படத்தின் இரண்டாவது, மூன்றாவது பாடல் எல்லாம் முழுக்க முழுக்க ரஜினிக்காக உருவாக்கப்பட்ட பாடலாக இருக்கிறது. இந்த பாடல் வரிகள் மறைமுகமாக விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அதோடு தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் வலம் வருபவர் விஜய் தான் என்று கூறுகிறார்கள்.

இசைவெளியீட்டு விழா:

இதனை அடுத்து சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சோசியல் மீடியாவில் விஜய் குறித்து பரவிய வதந்திக்கும், குட்டி ஸ்டோரி குறித்தும் மாஸாக பேசியிருந்தார். தற்போது இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. ட்ரைலரில் ஆரம்பத்தில் அமைதியாக இருக்கும் ரஜினிகாந்த் பின்னர் அதிரடி ஆக்ஷனில் இறங்கும் போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன் பதிவு:

இந்த நிலையில் ஜெயிலர் படம் குறித்து விக்னேஷ் சிவன் பதிவிட்டு இருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, ஜெயிலர் படத்தில் ரத்தமாரே என்ற பாடலை விக்னேஷ் சிவன் எழுதி இருக்கிறார். இது தொடர்பாக அவர் பதிவில், தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்காக முதல் பாடலை எழுதினேன். என்னுடைய குழந்தைகள் உயிர், உலகுக்காக எழுதிய முதல் பாடல்.

விக்னேஷ் சிவன்:

இது போன்ற தருணங்களுக்காக தான் வாழ்கிறோம். இயக்குனர் நெல்சன் மற்றும் அனிரூத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் என்று உருக்கமான பதிவை போட்டிருந்தார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் சிவன். நடிகை நயன்தாராவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு தான் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின் இவர்கள் இருவருக்கும் இரட்டை குழந்தை பிறந்திருக்கிறது. தற்போது இருவருமே கேரியலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

Advertisement