காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் மனதார ஏற்றுக்கொள்வோம். விஜய்க்கு தூதுவிடும் அரசியல் பிரபலம்

0
673
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக பட்டைய கிளப்பி கொண்டு வருபவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் உலக அளவில் சாதனை படைத்தது. பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் படம் “மாஸ்டர்”. மாநகரம்,கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் தான் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

கடந்த சில வாரங்களுக்கு முன் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நெய்வேயில் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென்று படப்பிடிப்பு தளத்திற்கு வந்த வருமான துறை அதிகாரிகள் சோதனைக்காக விஜய் அவர்களை அழைத்து சென்றார்கள். மேலும், விஜயின் பனையூரில் உள்ள வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இது சமூக வலைதளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்ததே. இதனை தொடர்ந்து விஜய் அவர்களின் வீட்டில் 23 மணி நேரம் சோதனைக்கு பிறகு எந்த ஒரு ஆவணமும் கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வெளிவந்தது.

- Advertisement -

பின் நெய்வேலியில் நடக்கும் படப்பிடிப்பு தளபதிற்கு விஜய் மீண்டும் சென்றார். ஆனால், பாஜகவினர் இந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த கூடாது என்று போராட்டம் செய்து வந்தனர். இதனால் விஜய்க்கு ஆதரவாக நின்ற ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர். தற்போது நிலைமை சரியாகியுள்ள நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இப்படி நெருக்கடியான கால கட்டத்தில் விஜய் வீட்டில் நடந்த ஐடி ரெயிட் குறித்து பல பேர் பலவிதமாகச் சமூக வலைத்தளங்களில் பேசி கொண்டு வந்தார்கள்.இந்நிலையில் நடிகர் விஜய் அவர்கள் இதையெல்லாம் கண்டு பயந்து விட மாட்டார் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி அவர்கள் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி விஜய்க்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இது எல்லாம் காங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய் இணைவதற்கான அழைப்பாக இருக்குமோ? என்றும் பல கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. இது குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு கே எஸ் அழகிரி அவர்கள் கூறியது, விஜய் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் நாங்கள் மனதார ஏற்றுக் கொள்வோம். இதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. ஆனால், இதெல்லாம் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வர வேண்டும் என்று நாங்கள் செய்யவில்லை. பொது நோக்கத்துடன் தான் செய்தோம் என்று தெரிவித்தார்.

-விளம்பரம்-
Advertisement