குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்கள் முடிந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே, இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த உடனே குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கும். அதோடு கடந்த நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் கடந்த ஐந்தாவது சீசன் நிகழ்ச்சியில் இருந்து விலகி, சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சிக்கு நடுவராக சென்றார். அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக குக் வித் கோமாளி 5 நிகழிச்சியில் களம் இறங்கி இருந்தார்.
குக் வித் கோமாளி:
மேலும், இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தான் தொகுத்து வழங்கி இருந்தார்கள். பின் கடந்த சீசனில் செஃப் கௌஷிக் நடுவராக களமிறங்கி இருந்தார். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருந்தார். கடந்த ஆறாவது சீசன் சிறப்பாக முடிந்தது. கடந்த சில வாரங்களாகவே குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சி குறித்த அப்டேட் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சில வாரங்களுக்கு முன்புதான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோகள் வெளியானது. அதில் நடுவர்கள், கோமாளிகள் எல்லாம் மாத்தி மாத்தி கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார்கள்.

குக் வித் கோமாளி 7:
அதோடு இந்த முறை நிகழ்ச்சியில் புது நடுவராக ரோஜாவும் களமிறங்கி இருக்கிறார். இந்த முறை நிகழ்ச்சியை புதுசாக வித்தியாசமாக கொண்டு செல்ல சேனல் தரப்பில் முயற்சித்திருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக ரியல் கணவன் மனைவிகள் சமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் வெளியாகி இருந்த லேட்டஸ்ட் புரோமோவில், குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் கிராண்ட் லான்ச் ஏப்ரல் நான்காம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதில் கணவன்- மனைவி ஜோடியாக கலந்து கொள்கிறார்கள்.
https://www.youtube.com/watch?si=pFihxybbd-7rcNTA&v=olsC-B8QieA&feature=youtu.be
லேட்டஸ்ட் ப்ரோமோ:
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் அரவிந்த்- சங்கீதா, பிக் பாஸ் கானா வினோத்- பாக்கியலட்சுமி, பிக் பாஸ் சம்யுக்தா- அனிருதா ஸ்ரீகாந்த், அறந்தாங்கி நிஷா-ரியாஸ் கான், பாடகர் மனோ, ஜமீலா ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சியின் தொகுப்பாளரை பார்ப்பதற்காக புகழ் ரூமுக்குள் செல்கிறார். ஆனால், அங்கு ரக்ஷன் இல்லை. வேறு ஒருவர் இருக்கிறார். பின் புகழ், ரக்சனுக்கு போன் செய்து எப்போது நிகழ்ச்சிக்கு வருவாய்? என்று கேட்கிறார். ஆனால், ரக்சன் எனக்கு பிசியாக இருக்கிறேன் என்று ஃபோனை வைத்து விடுகிறார். பின் மாதம் பட்டி ரங்கராஜ், ஓ ஜி ஆங்கரை இறக்குகிறேன் என்று சொல்கிறார்.,
அறந்தாங்கி நிஷா-ரியாஸ் கான், பாடகர் மனோ, ஜமீலா ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.






