குக்கு வித் கோமாளியின் கோமாளி பிக் பாஸ் 7- இல் கலந்துகொள்ள போகிறார்களா? யார் அந்த கோமாளி தெரியுமா ?

0
803
- Advertisement -

விஜய் டி.விகளில் ஒளிபதிவாகும் நிகழ்சிகளில் மிகவும் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இது ஆரம்பம் முதல் நல்ல வரவேற்ப்பை பெற்றதால் தற்போது சீசன் 7 வரை வந்துள்ளது. இந்நிகழ்ச்சிக்கு மற்றொரு பலம் என்றால் உலக நாயகன் கமல்ஹாசன் தான். இவர் தான் இந்த நிகழ்ச்சிற்கு தொகுப்பாளராக இருந்து வருகிறார். இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்களை தேர்ந்து எடுப்பதற்க்கான வேலைகளும் நடந்துகொண்டு உள்ளது என தகவல்கள் வெளியின.

-விளம்பரம்-

இந்நிகழ்ச்சியில் சோஷியல் மீடியாவில் புகழ்கள், விஜய் டி.வியில் உள்ளவர்கள், ஒரு காலத்தில் புகழ் பெற்ற நடிகைகள், பாடலாசிரியர்கள், மாடல்கள், நாட்டுபுற கலைஞர்கள் போன்றவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து வெற்றி பெரும் நபர்களுக்கு சிறந்த வரவேற்ப்பு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை. அதுமட்டுமல்லாமல் கடந்த சீனில் வெற்றி பெற்ற அசீமிற்கு 50 லட்சம் ருபாய் கிடைத்தது. பிக்பாஸ் சீசன் 7க்கான ப்ரோமோ இம்மாத இறுதிக்குள் வெளியாக கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.

- Advertisement -

இரண்டாவது வீடு குறித்து:

முந்தைய சீசன் போல ஒரு வீடு இல்லாமல் இருந்த முறை இரண்டு வீடுகள் உள்ளது என்பதை ப்ரோமாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டனர். அது இரண்டாவது வீடு எப்படி இருக்கும் என விசாரித்த போது அது பேய் வீடு போல் இருக்கிறது என்று கூறுகிறார்கள். வழக்கமான பிக் பாஸ் வீட்டில் சோபா ஏசி கழிவறை. கட்டில் மெத்தை என அற்புதமாக இருக்கும் ஆனால் இந்த மாதிரி இரண்டாவது வீட்டில் அந்த அளவு வசதி இருக்காது என்றும் கூறப்படுகிறது.

இதற்கு முன் நடந்த சீசன் களில்சகப் போட்டியாளர்களிடம் சண்டை போடுதல் அல்லது பிக் பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைகளில் ஈடுபடுதல் போன்றவர்கள் ஈடுபட்டால் அங்கு உள்ள சிறை போன்ற ஒரு அமைப்பில் அனுப்பி விடுவார்கள் அல்லது கார்டன் ஏரியாவில் அவர்களின் தங்க வைப்பார்கள். இரண்டாவது விடும் கிட்டத்தட்ட அது போன்ற தான் இருக்கும் என்றும் அது ஒரு அமானுஷ குரல் கேட்டு பாழடைந்த வீடுகளை இருப்பதாகவும் தகவல்கள். இந்த வருட பிக் பாஸ் சீசன் 7 க்காக போட்டி போட்டியாளர்களை தேர்வு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

-விளம்பரம்-

போட்டியாளர்கள் குறித்து:

பிக் பாஸ் சீசன் 7 வில் கலந்து  கொள்ள தேர்வான போட்டியாளர்களை சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் நிகழ்ச்சி ஏற்பட்டவர்கள் வரவைத்து அங்கு தங்குவது குறித்து தயாராகுவது குறித்து ஒரு சில வார்த்தைகள் பேசியதாகவும் தகவல்கள். இதன் பிறகு போட்டியாளர்களிடம் வீடுகளுக்கு சென்று அவர்களைப் பற்றியும் அவர்களது போட்டோக்களும் ஆடியோ ஷூட்டுகளும் எடுப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. பிக் பாஸ் ஏழு சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் போட்டியாளர்கள் யார் யார் என்று பார்த்தால் டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர் நடிகர் தினேஷ், விஜய் டிவி ஜாக்லின் பப்லு என சில பேர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி மூலம் புகழ்பெற்ற ரவீனா கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஆரம்பங்களில் சன் டிவிகளில் வெளிவந்த தங்கம் தொடரிலும் பின் ஜீ தமிழில் வெளிவந்த பூவே பூச்சூடவா தொடரில் நடித்து வந்தார். அதன் பின்பு தான் விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி ஒரு கோமாளியாக வந்து பிரபலமானார். இவர் instagram இல் அவ்வப்போது நடன வீடியோக்களும் போட்டோ சுட்டுக்களும் பதிவேற்றம் செய்து எப்பொழுது ஆக்டிவாக இருப்பார். இது ரவீனாவின் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Advertisement