பழைய ஜோக் சொல்ல முயன்ற தங்கதுரையை பங்கம் செய்த இசைப்புயல் – குக் வித் கோமாளியின் செம ப்ரோமோ.

0
2490
rahman
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

சொல்லப்போனால் சமீபத்தில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. செம ஜாலியாக சென்று கொண்டு இருந்த இந்த சீசன் விரைவில் நிறைவடைய இருக்கிறது. இறுதி போட்டிக்கு ஏற்கனவே கனி, பாபா பாஸ்கர், அஸ்வின் ஆகிய மூன்று பேர் தேர்வாகினர். இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்ற 4 வது இறுதி போட்டியாளருக்கான வைல்டு கார்டு போட்டியில் ஒருவர் தான் பைனலுக்கு தகுதி பெறுவார் என்று எதிர் பார்க்கப்பட்டது.

இதையும் பாருங்க : கர்ணன் படத்தை பார்த்துவிட்டு மாரி செல்வராஜை கட்டியணைத்து முத்தமிட்ட விஜய் சேதுபதி – வைரல் வீடியோ.

- Advertisement -

இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்த நிலையில் இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக சிம்பு வந்திருந்தார்.இந்த சீசனில் யார் வெற்றிபெறுவார்கள் என்று மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

சிம்புவை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முகன், பாடகி தீ, அறிவு, சந்தோஷ் நாராயணன் என்று பலர் வந்துள்ளனர். அதே போல வீடியோ மூலம் குக்கு வித் கோமாளி டீமிற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான். அப்போது கனியை ‘என்ன பைனஸ்ல்ல கூட காரக் கொளம்பு தானா’ என்று பங்கம் செய்துள்ளார். அதே போல தங்க துறை ஜோக் சொல்ல முற்பட்ட போது பாய் சொல்லி அவரையும் கலாய்த்துள்ளார் ரஹ்மான்.

-விளம்பரம்-
Advertisement