ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குக்கு வித் கோமாளி சீசன் 3யின் ப்ரோமோ. போட்டியாளர்கள் யார் யார் ?

0
445
cooku
- Advertisement -

விஜய் டிவி ரசிகர்கள் அவளுடன் எதிர்பார்த்து வந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசன் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் சீசன் ஒளிபரப்பானது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது.

-விளம்பரம்-

சூப்பர் ஹிட் அடித்த சீசன் 2 :

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குக் வித் கோமாளியின் பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்து. இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்த நிலையில் இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினராக சிம்பு வந்திருந்தார்.

- Advertisement -

சினிமாவில் வாய்ப்பை பெற்ற போட்டியாளர்கள் :

இந்த சீசனில் யார் வெற்றிபெறுவார்கள் என்று மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் அஸ்வின், புகழ், சிவாங்கி, தர்ஷா, பவித்ரா என்று பலருக்கும் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

வெளியான சீசன் 3 ப்ரோமோ :

இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதே போல விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில வாரமாகவே குக்கு வித் கோமாளி பற்றிய செய்திகள் வைரலான நிலையில் தற்போது மூன்றாம் சீசனுக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

பலர் எதிர்பார்த்த புகழ் இல்லை :

இந்த ப்ரோமோவில் ரசிகர்களின் மிகவும் அபிமானமான கோமாளியான புகழ் காணவில்லை. சீசன் 2விற்கு பின் புகழுக்கு தமிழில் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இறுதியாக சந்தானம் நடித்த ‘சபாபதி’ படத்தில் நடித்து இருந்த புகழ், அஜித்தின் வலிமை படத்திலும் நடித்து இருக்கிறார். இதை தவிர அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

போட்டியாளர் யார் யார் ?

ஏற்கனவே பேட்டி ஒன்றில் பங்கேற்ற குக்கு வித் கோமாளியின் ஒரு நடுவாரான தாமுவிடம் சீசன் 3 எப்போது துவங்கும் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தாமு,  இந்த சீஸன் முடிஞ்சது ரொம்ப கஷ்டமா இருக்கு. சீசன் 3 100% வர வாய்ப்பு இருக்கு. கோமாளிகள் இவங்களேதான். குக்ஸ் பெரும்பாலும் பிக்பாஸ், சீரியல் நட்சத்திரங்கள்னு வர வாய்ப்பு அதிகம் இருக்குது என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement