விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு காமெடி நடிகர்கள் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார்கள். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த தீனா சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த கைதி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆனால், இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இவர் சரத் என்பவருடன் இணைந்து தீனா செய்த காமெடிகள் நாம் யாராலும் மறக்க முடியாது.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இவரது பார்ட்னராக இருந்த சரத், பார்ப்பதற்கு அச்சு அசலாக திரைப்பட நடிகர் மொட்டை ராஜேந்தர் போன்று இருந்தார். மேலும், இவர் தீவுடன் இணைந்து மொட்டை ராஜேந்திரன் பேசி அசத்தி காமெடிகள் செய்திருந்தார்.சரத் , கலக்க போவது யாரு நிகழ்ச்சிக்கு முன்பாகவே விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான வெற்றித் தொடரான கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தவர் என்பதும் பலரும் அறிந்திராத ஒரு விஷயம்.
யுதன் பாலாஜி நடித்த கனா காணும் காலங்கள் சீசனில் தான் சரத் நடித்திருந்தார். அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தான் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை வைத்து இவர் சிபிராஜ் நடிப்பில் வெளியான சத்யா படத்திலும் நடித்திருந்தார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சில தொடர்களில் கூட நடித்திருக்கிறார்.
தற்போது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் சரத். கடந்த ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி சதரத்திற்கு கிரித்திகா என்ற பெண்ணோடு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து இருந்தது. மேலும், இவர்கள் திருமணம் கடந்த ஆக்டொபர் 26 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.