ஹீரோவும் வாரிசு நடிகர் ஹீரோயினும் வாரிசு நடிகை – அஸ்வின் தவறவிட்ட கிருத்திகா உதயநிதி படம் (அதுக்கு அவர் சொன்ன காரணம் இருக்கே)

0
2365
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது.அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் அஸ்வினும் ஒருவர். இந்த சீசனில் பலரது பெண்கள் மனதையும் கவர்ந்தவர் அஸ்வின் தான்.

-விளம்பரம்-

அஸ்வின், விஜய் டீவிக்கு புதிதானவர் அல்ல, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்துளளார். அதே போல ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற படங்களில் சிறு ரோலில் நடித்து இருக்கிறார். ஆனால், இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக வர வேண்டும் என்பது தான் ஆசை. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் இரண்டு படங்களில் ஹீரோவாக கமிட் ஆகி இருந்தார்.

இதையும் பாருங்க : உள்ள இருக்குறது எல்லாமே தெரியுது – டிடியின் புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்.

- Advertisement -

ரெட் ஜெயிண்ட் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா இயக்கத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்க இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் இருந்து அஸ்வின் நீக்கப்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து கூறியுள்ள அஸ்வின், எனக்கு இந்த கதை மிகவும் பிடித்து இருந்தது. ஆனால், படக்குழு இதனை ஒரு வெப் சீரிஸ்ஸாக எடுக்க திட்டமிட்டனர்.

எனக்கு வெள்ளித்திரையில் வர வேண்டும் என்பது தான் ஆசை. அதனால் இந்த பிராஜெக்டில் இருந்து நான் விலகிவிட்டேன் என்று கூறியுள்ளார். தற்போது இந்த படத்தில் அஸ்வினுக்கு பதில் பிரபல மலையாள நடிகர் ஜெய்ராமின் மகன் காளிதாஸ் இந்த படத்தில் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளாராம். அதே போல் இவருக்கு ஜோடியாக கருப்பன் பட நடிகையும் பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மகளுமான தான்யா கமிட்டி ஆகி இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement