குக்கு வித் கோமாளி செட்டில் ஷிவாங்கியோடு எடுத்த கடைசி புகைப்படம் – உருக்கத்தோடு பகிர்ந்த அஸ்வின்.

0
3122
aswin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களுக்கு முன் குக் வித் கோமாளியின் பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்து.இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்தனர். இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சையமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் அஸ்வினும் ஒருவர்.

இதையும் பாருங்க : போஸ்டருக்கு போட்டோ ஷூட்லாம் கூட பண்ணிட்டோம் – ஆனால், இந்த காரணத்தால் ஜென்டில் மேன் படத்த வேணாம்னு சொல்லிட்டேன்.

- Advertisement -

அஸ்வின், விஜய் டீவிக்கு புதிதானவர் அல்ல, இவர் கடந்த 2015 ஆம் ஆண்டே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டை வால் குருவி’ என்ற சீரியலில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. ஜூனில் துவங்கிய இந்த சீரியல் அக்டோபர் மாதம் நிறுத்தப்பட்டது. இந்த சீரியல் மொத்தம் 100 எபிசோடுகள் மட்டும் தான் ஒளிபரப்பானது.இந்த சீரியலை தொடர்ந்து அஸ்வின் 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட நினைக்கத் தெரிந்த மனமே என்ற சீரியலில் நடித்தார்.

Cook with comali shivangi with ashwin funny pictures pulikesi getup

இந்த சீசனில் முதல் இடத்தை கனியும், இரண்டாம் இடத்தைஅஸ்வினும் , மூன்றாம் இடத்தை ஷகீலாவும் வென்றுள்ளனர். இனி பார்க்க முடியாதா என்று பல பெண் ரசிகைகள் ஏங்கி கொண்டு இருக்க குக்கு வித் கோமாளி செட்டில் இறுதியாக எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அஸ்வின். அதிலும் ஷிவாங்கியுடன் தான் கடைசி போட்டோவை எடுத்துள்ளார் அஸ்வின்.

-விளம்பரம்-
Advertisement