ஒருவழியாக மணிமேகலைக்கு ரக்ஷனுடன் ஆங்கரிங் செய்ய வாய்ப்பை அளித்த விஜய் டிவி. இதோ புகைப்படம்.

0
1141
mani
- Advertisement -

தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. அந்த வகையில்கடந்த இரண்டு சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது.

-விளம்பரம்-

இந்த இரண்டு சீசனிலும் பல்வேரு கோமாளிகள் கலந்துகொண்டாலும் அதில் ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு கோமாளியாக இருந்தவர் பிரபல VJ மணிமேகலை. சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார்.

இதையும் பாருங்க : விஷ்ணு விஷால் Birthday ஸ்பெஷல் – தான் மிகவும் நேசித்த கிரிக்கெட்டை அவர் விட்ட காரணம் இது தானாம் பாவம்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்துதிருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கொண்டதால் இவருக்கு தொகுப்பாளினியாக பணிபுரியும் வாய்ப்பு அமையவில்லை. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட அடிக்கடி தன்னை ஆங்காராக போட வேண்டும் என்று புலம்பிக்கொண்டே இருந்தார்.

சமீபத்தில் துவங்கப்பட்ட ரசிகர்கள் மிஸ்சஸ் சின்னத்திரை சீசன் 3 நிகழ்ச்சியில் அர்ச்சனா ஆங்காரக போடபட்ட போது மணிமேகலைக்கு வாய்ப்பு கொடுக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். ‘சிங்கள் பொண்ணுங்க’ நிகழ்ச்சியில் ம க பாவுடன் இணைந்து ஆங்கராக பணிபுரியும் மணிமேகலை தெறி பேபி என்ற புதிய நிகழ்ச்சியில் ரக்ஷனுடன் இணைந்து ஆங்கரிங் செய்ய இருக்கிறார். குக்கு வித் கோமாளியில் இருந்தே ரக்ஷனுடன் இணைந்து ஆங்கரிங் செய்ய வேண்டும் என்று மணிமேகலை தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார். இப்படி ஒரு நிலையில் அவரது ஆசையை நிரைவேற்றியுள்ளது விஜய் டிவி.

-விளம்பரம்-
Advertisement