தமிழ் சினிமா உலகில் முடி சூடா மன்னனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் தளபதி விஜய். பிகில் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். சமீபத்தில் தான் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது.
மேலும், இந்த படத்தினை விஜய்யின் மாமா எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறார். இந்நிலையில் மாஸ்டர் படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட இருந்தது. ஆனால், நாடு முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் கொரோனாவினால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும், படங்கள் வெளியிடுவதும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதையும் பாருங்க : சிறு வயதில் எனக்கு நீங்கள் அளித்த இந்த இரண்டு விஷயத்தை மறக்க மாட்டேன்- மனமுறுகிய ஏ ஆர்.
இந்த சூழ்நிலையில் மாஸ்டர் படத்தின் விநியோகஸ்தர்கள் பணத்தை திருப்பி தரவேண்டும் என்று தயாரிப்பாளர் மற்றும் ஹீரோ விஜய்யிடம் பிரச்சனை செய்து வருகிறார்கள். இதற்காக ராஜ சபா முன்னால் எம்.பி.சசிகலா கெடு வைத்து உள்ளார். தற்போது இந்த நியூஸ் சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.தளபதி விஜய் படம் என்றாலே பூஜை ஆரம்பிக்கப்பட்ட நாட்களிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு எதிர்பார்க்கப்படும். அதேபோல் விஜய் படம் விற்பனைக்கு தயாராகி விடும். அதனால் இவரை வைத்து படம் இயக்க பல தயாரிப்பாளர்கள் முன்வருகின்றனர்.
தளபதி விஜயை வைத்து 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான படங்களை எடுக்க தயாராக இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். கடந்த ஆண்டு 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த பிகில் படம் 300 கோடிக்கும் மேல் அதிகமான வசூலை வாரி குவித்ததாக கூறப்படுகிறது. இந்த முறை விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோவே விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரிக்கிறார். இந்த படம் வெளியிடுவதற்கு சேவியர் பிரிட்டோ தன்னுடைய பணத்தை செலவு செய்யாமல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி உலகம் முழுவதும் மாஸ்டர் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு வந்தனர். உலக முழுவதும் ரிலீஸ் செய்ய 13 விநியோகஸ்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர். படம் எடுத்து முடிவதற்கு முன்னரே அவர்களுக்கு விநியோக உரிமை வழங்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கு படம் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு இன்னும் நீட்டிக்க உள்ளதால் விநியோகஸ்தர்கள் வயிற்றில் புளியை கரைக்கிறது. விநியோகஸ்தர்கள் எல்லோரும் வட்டிக்கு வாங்கி மாஸ்டர் படத்தில் முதலீடு செய்ததால் வட்டி குட்டி போட்டுக் கொண்டே செல்கிறது.
இதையும் பாருங்க : ப்ளீஸ் போயிடு கொரோனா, கண்கலங்கி கை கூப்பி கெஞ்சிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.
இதனால் விநியோகஸ்தர்கள் மிகவும் கவலையில் உள்ளார்கள். இதனால் மாஸ்டர் படத்தின் விநியோகிஸ்தர்கள் விஜய் மற்றும் தயாரிப்பாளர் இடம் தங்கள் பிரச்சினையை சொல்லி முறையிட்டுள்ளனர். விநியோக உரிமையை திருப்பி கொடுத்து விடுகிறோம்,எங்கள் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுங்கள். எங்களை கடன் பிரச்சனையிலிருந்து தீர்த்து வையுங்கள் என்று கையெடுத்து கும்பிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய்யும், சேவியர் பிரிட்டோவும் இது குறித்து பேசிக் கொள்ளலாம் கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று கூறியுள்ளார்களாம்.
பின் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க சொல்லி பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் ராஜ்யசபா எம்பியான தூத்துக்குடி சசிகலா புஷ்பா இடம் எடுத்துச் சொல்லப்பட்டது. இது குறித்து சசிகலா அவர்கள் கூறியிருந்தது, இந்த மாதத்திற்குள் விநியோகஸ்தர்கள் பணத்தை முறையாக விஜய்,தயாரிப்பாளர் கொடுத்து விடுவது தான் நல்லது இல்லை என்றால் சட்ட ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று கூறியிருக்கிறார். விஜய், தயாரிப்பாளர் சோவியோ பிரிட்டோ மௌனத்தைக் கலைத்து பணத்தை திருப்பிக்கொடுத்தால் இந்த பிரச்சனை தீரும் என்று சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் அதை செய்வார்களா?? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்.