பவித்ரா தான் புகழ்க்கு நல்ல ஜோடி, ரம்யாவ போடாதீங்க – ரசிகரின் பதிவிற்கு பவித்ரா அளித்த பதில்.

0
7441
ramya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் குக்கு வித் கோமாளி சீசன் 1 போட்டியாளர்களான வனிதா, ரம்யா, ரேகா, உமா ரியாஸ் ஆகியோர் வந்திருந்தனர். சீசன் 1-ல் ரம்யா பாண்டியன் இருந்த வரை அவரிடத்தில் தான் ரொமான்ஸ் சேட்டையை செய்து வந்தார். இரண்டாவது சீசனில் அதே பிட்டை தர்ஷா மற்றும் பவித்ராவிடம் போட்டு வருகிறார் புகழ். இப்படி ஒரு நிலையில் Pugazhanna__fc என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ரசிகர் ஒருவர், பவித்ரா, புகழுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில், இந்த ஜோடி தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.

- Advertisement -

தயவு செய்து ரம்யா பாண்டியனை ஜோடி சேர்க்காதீர்கள். அவர் இன்று ஓவராக சீன் போட்டார். முதல் 45 நிமிடம் நான் மிகவும் காயப்பட்டேன். பவி தான் குக்கு வித் கோமாளியில் உங்களுக்கு குயூட் ஜோடி என்று என் மனம் சொல்கிறது என்று பதிவிட்டு இருந்தார். இரண்டு பேரை ஒப்பிடுவது மிகவும் சுலபம், குறை கண்டுபிடிப்பதும் சுலபம். அனைத்திற்கும் மேலாக இது ஒரு ரியாலிட்டி ஷோ என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்.

அதன் முக்கிய நோக்கம் உங்களை மகிழ்விப்பது தான். தனிப்பட்ட முறையில் எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். நாங்கள் யாரும் அதை செய்வது இல்லை. ரம்யா மிகவும் இனிமையான நபர். முந்தய சீசன் அனைத்து எபிசோடையும் இப்போதான் பார்த்தேன். ஒரு மணி நேர நிகழ்ச்சியை வைத்து யாரையும் மதிப்பிடத்தீர்கள். அனைவருக்கும் உங்கள் அன்பை கொடுங்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றும் இல்லை. நீங்கள் யாரையும் உருவாக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். ஆனால், தயவு செய்து முடிந்த வரை அன்பை பகிருங்கள்.

-விளம்பரம்-
Advertisement