எத்தனையோ கார் இருந்தும் அஜித் இன்னோவாவை பயன்படுத்துவது ஏன்.! அஜித் மேனேஜர்.!

0
409
Ajith

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் வெறியர் என்றே கூறலாம். சினிமாவில் நடிக்கவருவதற்கு முன்பாக பார்முலா கார் ரெஸர் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார் நடிகர் அஜித் குமார்.  

அஜித் ஒரு கார் பிரியர் என்பதால் அவரது படத்திலும் கார் அல்லது பைக் ஓட்டும் மாஸ் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்று விடும். நடிகர் அஜித்தை போல வேறு யாராலும் கார் ஓட்ட முடியாது என்று அஜித்தின் நெருங்கிய நண்பர்கள் பல பேர் கூறி நாம் கேட்டுளோம்

அதே அஜித் வீட்டின் கராஜில் பல வகையான பைக் மற்றும் கார் நின்றுகொண்டிருக்கும். ஆனால், பெரும்பாலும் அஜித் வெளியில் சென்றால் அவர் சிகப்பு நிற சிப்ட் கார் அல்லது வெள்ளை நிற இன்னோவா காரில் தான் பயணம் செய்வார்.

எத்தனையோ அஜித்தை விட சிறிய நடிகர்கள் கூட சொகுசு கார்களில் பயணிக்கும் போது அஜித் இன்னோவா காரை பயன்படுத்துவது ஏன் என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார் அஜித்தின் மேனஜர், அவர் பெரிய கார்களில் பயணம் செய்யும் போது பார்ப்பதை விட Innova போன்ற கார்களில் பயணித்தால் ரசிகர்களை தங்களில் ஒருவராக தன்னை எண்ணுவார்கள் என்பதாலும், சொகுசு கார்களில் போனால் அது நிச்சயம் பிரபலத்தின் கார் என்று பின்தொடரவும் வாய்ப்புள்ளதால் அஜித் எளிமையான காரில் செல்கின்றார் என்று கூறியுள்ளார்.