ஆப்ரேஷன் முடிஞ்சு என் மூஞ்சிய கண்ணாடில என்னாலயே பாக்க முடுயல – தனக்கு நேர்ந்த விபத்து குறித்து பவித்ரா

0
453
pavithra
- Advertisement -

தனக்கு ஏற்பட்ட விபத்தால் முகமே மாறி போயி இருந்தது என்று நடிகை பவித்ரா லட்சுமி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் பவித்ரா லட்சுமி. இவர் மாடலிங் மூலம் தான் மீடியா துறைக்கு அறிமுகமானார். அதன் பின் இவர் குறும்படம் நடித்தார். பின் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் தமிழ் படத்திலும் நடித்தார். அதுமட்டுமல்லாமல் இவர் இரட்டை வால் குருவி என்ற சீரியலில் நடித்து இருக்கிறார். இருந்தாலும், இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவர் சில படங்களில் கமிட் ஆகியிருந்தார்.

- Advertisement -

பவித்ரா லட்சுமி குறித்த தகவல்:

அந்த வகையில் கடந்த ஆண்டு பவித்ரா லட்சுமி நடிப்பில் வெளியாகியிருந்த படம் நாய் சேகர். இந்த படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை பவித்ரா லட்சுமி அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர், வெற்றி என்பது ஈசியாக கிடைக்காது. என்னுடைய வாழ்க்கையிலும் அப்படித்தான் எனக்கு நடந்தது. எல்லா கஷ்டங்களையும் கடக்க என்னுடைய மொத்த நம்பிக்கையாக இருந்தது என்னுடைய அம்மா தான்.

பவித்ரா அளித்த பேட்டி:

பவித்ரா லட்சுமி டாட்டர் ஆஃப் லக்ஷ்மி என்று சொல்வதுதான் என்னுடைய பெருமை. என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். எனக்கு சிறுவயதிலிருந்தே மீடியாவில் வேலை செய்ய வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், அம்மாவுக்கு பிடிக்காது. அம்மாவுக்கு டான்ஸ், நடிப்பு, மாடலிங் இது எதிலும் விருப்பம் கிடையாது. நான் நல்லா படித்து ஒரு வேலைக்கு போக வேண்டும் என்பதன் அவர்களுடைய ஆசை. சிங்கள் மதராக என்னை அவர்கள் வளர்த்தார்கள். என்னை வளர்க்க அம்மா நிறையவே கஷ்டப்பட்டு இருந்தார்கள். பணம் அதிகமாக வேண்டும் என்று லீவு நாளில் கூட அவர்கள் வேலைக்கு போவார்கள். ஆனால், ஒருநாளும் அவர்கள் கஷ்டத்தை என்னிடம் காட்டினதே கிடையாது.

-விளம்பரம்-

கேரியர் குறித்து சொன்னது:

அம்மாவுக்காக படித்து பத்தாவது ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தேன். சின்ன வயதிலேயே நான் ஆசைப்பட்டேன்னு அம்மா என்னை பரதநாட்டியத்தில் சேர்த்து விட்டார்கள். ஸ்கூல் படிக்கும்போதே அரங்கேற்றம் எல்லாம் பண்ணி இருக்கிறேன். நான் படித்து முடித்ததும் காலேஜ் ப்ரொபஸர் ஆகணும் என்று அம்மா அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், நான் படிப்பை முடித்துவிட்டு சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். வேலை பார்த்துக் கொண்டே மாடலிங், டான்ஸும் பண்ணிட்டு இருந்தேன். மாடலிங் டான்சில் கொஞ்சம் பிசியாக ஆரம்பித்த நேரத்தில் தான் எதிர்பாராத விதமாக நான் ஒரு விபத்தை சந்தித்தேன். முகம், கை காலில் பயங்கரமான அடி ஏற்பட்டது. நானே போய் தான் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனேன். எமர்ஜென்சியாக ஒரு சர்ஜரி பண்ணாங்க.

பவித்ராவுக்கு ஏற்பட்ட விபத்து:

எப்படியும் சமாளிச்சிடலாம் என்று நினைத்தேன். ஆனால், என்னால் எழுந்து கூட உட்கார முடியவில்லை. ஆப்ரேஷன் முடிந்த போது என்னுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்க எனக்கே பிடிக்கவில்லை. அழுகையாக இருந்தது. ஆனால், சோர்ந்து உட்கார்ந்துட்டால் இதுவரை போராடினதெல்லாம் வீணாகிவிடும் என்று எந்த இடத்திலும் என்னுடைய நம்பிக்கையை நான் இழக்கவில்லை. எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொண்டேன். நண்பர்களின் உதவியால் தான் நான் மீண்டும் வந்தேன். விபத்து, சிகிச்சை செலவானது குறித்து என்னுடைய அம்மா கிட்ட நான் சொல்லவே இல்லை. நான் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு வந்த பிறகுதான் அம்மாவிடமே சொன்னேன். என்னுடைய அம்மா அதிர்ச்சியானாலும் அவர்கள் கொடுத்த நம்பிக்கையில் தான் நான் மறுபடியும் ஓட ஆரம்பித்தேன். மீண்டும் மாடலிங், நடிப்பு என்று பிசியாக இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement