பவித்ராவை ரெண்டு நாளா வெச்சி செய்யும் மீம் கிரியேட்டர்கள் – காரணம் இதான். அதற்கு பவித்ராவின் ரியாக்ஷன்.

0
1449
pavithra
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்தனர்.இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு இருந்தனர். அதில் பவித்ரா லட்சுமியும் ஒருவர்.

-விளம்பரம்-
Image

நடிகை பவித்ரா லட்சுமி ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக மீடியா துறைக்கு அறிமுகமானார். மேலும் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமல்லாமல் இவர் இரட்டை வால் குருவி என்ற சீரியலிலும் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

பவித்ரா லட்சுமியை பலரும் சமந்தாவுடன் ஒப்பிட்டு வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட இவர் தெறி பட சமந்தாவை போல இருந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. அதை வைத்து பலரும் பல விதமான மீம்களை ஷேர் செய்தனர். இப்படி ஒரு நிலையில் பவித்ரா லட்சுமி என்ற ட்விட்டர் கணக்கில் பவித்ராவின் புகைப்படம் ஒன்று பதிவிடபட்டு டேக் மீ அப் என்று கேப்ஷனும் போடபட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்தகேப்ஷனை பார்த்த நெட்டிசன்கள் பவித்ரா லட்சுமிமியின் இந்த புகைப்படத்தை மேல தூக்கப்பட்டு இருப்பது போல பல விதமான மீம்களை பகிர்ந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பவித்ரா, காலைல இருந்து இந்த மீம் எல்லாம் பாத்து வயிறு வலிக்க சிரிச்சிட்டேன். என்னுடைய மைண்ட் வாய்ஸ் ‘நான் போடாத கேப்ஷனுக்கு என்ன ஏன்டா ட்ரோல் பண்றீங்க.

-விளம்பரம்-

தெய்வமே அது போலி கணக்கில் இருந்து வந்த போலியான கேப்ஷன். நான் பாவம். ஆனாலும் இந்த மீம்ஸ் செம’ என்று பதிவிட்டுள்ளார். அதே போல தனது உண்மையான ட்விட்டர் கணக்கில் லிங்கை பதிவிட்டு, மக்களே இது தான் என்னுடைய உண்மையான ட்விட்டர் கணக்கு, என்னுடைய அப் டேட்களை பற்றி தெரிந்துகொள்ள இதை பாலோ பண்ணுங்க. போலி கணக்கில் போடப்பட்ட பதிவுகளுக்கு நான் பொறுப்பல்ல என்றும் கூறியுள்ளார்.

Advertisement