விளக்கு ஏற்றும் செயலை செய்யாதது எனக்கு பெருமையாக தான் இருக்கிறது. ரோகினியின் அதிரடி பதில்

0
11482
Rohini
- Advertisement -

இந்தியாவில் கொரோனாவினால் 4485 பேர் பாதிக்கப்பட்டும், 129 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஊரடங்கு உத்தரவினால் போக்குவரத்து, கடைகள், மக்களின் பொழுதுபோக்கு இடங்கள், மது கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், முதலில் மோடி அவர்கள் மருத்துவர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமை அன்று கைதட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் சோசியல் மீடியாவில் இருந்து வந்தது.

-விளம்பரம்-

இதேபோல் நேற்று அனைவரின் வீட்டிலும் 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணைத்து விளக்கு ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து நேற்று பல்வேறு மக்கள் பல்புகளை அணைத்து விளக்குகளை ஏற்றி வைத்தார்கள். அதிலும் ஒரு சில பேர் பட்டாசுகளை வெடித்து திருவிழா போன்று கொண்டாடினார்கள். இதற்கு பல பிரபலங்களும் ஆதரவு தெரிவித்து சோசியல் மீடியாவில் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்கள்.

இதையும் பாருங்க : 24 மணி நேரத்தில் கிடைத்த வரவேற்பு. சகோதரிகள், அருண் விஜய் என்று ஒட்டு மொத்த குடும்பத்தையும் டேக் செய்த வனிதா.

- Advertisement -

இந்நிலையில் மோடி அவர்கள் சொன்னதை எதிர்த்து புறக்கணிக்கும் வகையிலும் சில பிரபலங்கள் தங்களது பதிவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார்கள். அந்த வகையில் நடிகை ரோகினி அவர்களும் மோடி கருத்தை புறக்கணித்து உள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பது, லட்சக்கணக்கான ஏழை மக்கள் பிச்சைக்காரர்கள் போல் உணவுக்கு கை ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில் ஒளியேற்றும் செயலை புறக்கணித்ததில் நான் பெருமை கொள்கிறேன் என்று கூறினார். இது குறித்து நடிகை ரோகினியிடம் கேட்ட போது அவர் கூறியது, எல்லோரை போல தான் நானும் இந்த நாட்களில் வெளியே போகாமல் வீட்டிலேயே எல்லா வேலைகளும் செய்து கொண்டும், புத்தகங்கள் படித்து கொண்டும் இருக்கிறேன். இந்த நேரத்தில் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். இந்த மாதிரி சமயத்தில் கைத்தட்டுங்கள், விளக்கு ஏற்றுங்கள் என்று அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : இவன் எப்படி டா நயன்தாராவ கரெக்ட் பண்ணான்’ நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் போட்ட கேப்ஷன். கடுப்பான ரசிகர்கள்.

-விளம்பரம்-

என்னை பொறுத்தவரை கைதட்டினால், விளக்கு ஏற்றினால் கொரோனா போய் விடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த கொரோனாவினால் பல தொழிலாளர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்து அன்றாடம் உணவிற்காக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலைமையில் கை தட்டுவதிலும், விளக்கு ஏற்றுவதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அதைத்தான் நான் சொன்னேன் என்று கூறினார். இவருடைய கருத்துக்கு பலரும் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலைமை மோசமடைந்து வருவதால் இந்த மாதம் முழுக்க ஊரடங்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் மூன்று மாதங்கள் வரை ஊரடங்கு நீடிக்கலாம் என்ற தகவல்களும் சோசியல் மீடியாவில் வந்து கொண்டிருக்கின்றன. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வரவேண்டும் என்றும் கூட்டம் கூட கூடாது என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலைமை இப்படியே நீடித்தால் தினசரி கூலி தொழிலாளர்களின் நிலை என்ன என்பதே புரியவில்லை. இந்த கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தினசரி கூலி தொழில் செய்யும் மக்கள் மட்டும் தான். தற்போது அவர்களின் வாழ்வாதாரமே ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

Advertisement