புல்லட் பைக் ஓட்டிய CWC பிரபலம், கமெண்டில் குவிந்த விமர்சனம். பவித்ரா அளித்த விளக்கத்தை பாருங்க.

0
173
- Advertisement -

ஹெல்மெட் அணியாமல் நடிகை பவித்ரா பைக் ஓட்டிருக்கும் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அதில் ஒன்று ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது நான்கு சீசன் முடிந்து இருக்கிறது.

-விளம்பரம்-
pavithra

கூடிய விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி இருப்பவர் பவித்ரா லட்சுமி. இவர் ஆரம்பத்தில் குறும்படம் மூலமாக மீடியா துறைக்கு அறிமுகமானார். பின் மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பவித்ரா லக்ஷிமி குறித்த தகவல்:

அதுமட்டுமல்லாமல் இவர் இரட்டை வால் குருவி என்ற சீரியலிலும் நடித்து இருக்கிறார். இந்த சீரியலில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அஸ்வினும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரட்டைவால் குருவி சீரியலை தொடர்ந்து நினைக்கத் தெரிந்த மனமே என்ற சீரியலில் கூட நடித்திருக்கிறார் பவித்ரா. இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கி இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான்.

பவித்ரா திரைப்பயணம்:

அதன் பின் இவர் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியிருந்த ஓ காதல் கண்மணி படத்தில் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதற்குப்பின் இவர் கடந்த ஆண்டு சதீஷ் ஹீரோவாக நடித்திருந்த நாய் சேகர் என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனை அடுத்து இவர் மலையாளம், தமிழ் என பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

பவித்ரா பைக் ஓட்டும் புகைப்படம்:

கடந்த ஆண்டு இவர் ஜிகிரி தோஸ்த் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் டைம் என்ன பாஸ் என்ற வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இதில் பிரியா பவானி சங்கர், பரத், அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து இவர் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் பவித்ராவின் பைக் ஓட்டிய புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, இவருக்கு ஆண்கள் ஓட்டும் பைக்கை ஓட்ட வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசையாம். ஆனால், இவருக்கு பைக் ஓட்ட வராது.

பவித்ரா பதில்:

இவருடைய நண்பர்கள், உறவினர்கள் யாருமே பைக் ஓட்ட இவருக்கு சொல்லித் தரவில்லை. நோமேட் பைக்கர்ஸ் கிளப் மூலம் மூன்று நாட்களில் பைக் ஓட்ட கற்றுக்கொண்டார். பைக் ஓட்டும்போது எடுத்த புகைப்படத்தை தான் இவர் இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டி இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே பவித்ராவை பாராட்டினாலும் அவர் சாலையில் ஹெல்மெட் போடாமல் போனது குறித்து கன்னடம் தெரிவித்தும், பவித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள். இதற்கு பவித்ரா, ஹெல்மெட் ஒட்டிதான் வண்டி ஓட்டினேன். அது ஒரு பத்து நிமிட வீடியோக்காக ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டினேன் என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

Advertisement