சன் டிவிக்கு வந்த மேலும் ஒரு கேப்ரில்லா – சமீபத்தில் கேஸ் வாங்கிய நடிகருக்கு ஜோடியாகும் சீரியலின் பூஜை

0
598
- Advertisement -

பிக் பாஸ் புகழ் கேப்ரில்லா நடிக்க இருக்கும் புது சீரியல் குறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கேப்ரில்லா. இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் விஜய் தொலைக்காட்சி மூலம் தான் மக்களுக்கு பரிச்சியமானார். இவருக்கு சிறு வயதில் இருந்தே நடனத்தில் அதிகம் ஆர்வம். இதனால் இவர் ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

பின் அந்த நிகழ்ச்சியில் இவர் டைட்டில் பட்டத்தையும் வென்று இருந்தார். அதனை அடுத்து இவருக்கு சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. அதனை தொடர்ந்து இவர் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘7 சி’ என்ற சீரியலில் நடித்தார். பின் தனுஷின் 3 உட்பட சில படங்களில் நடித்து இருந்தார் கேப்ரில்லா. மேலும், சின்னத்திரை பிரபலத்தினால் கேப்ரில்லாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்தும் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது.

- Advertisement -

கேப்ரில்லா குறித்த தகவல்:

அந்த வகையில் இவர் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டு இருந்தார். பின் கேபி 5 லட்ச ருபாய் பணத்துடன் வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேப்ரில்லா சின்னத்திரையில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்று இருந்தார். அதிலும் இவர் BB ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியிலும் பங்குபெற்று இருந்தார். பின் இவர் ஈரமான ரோஜாவே 2வில் நடித்து இருந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற தொடர் தான் ஈரமான ரோஜாவே 2.

ஈரமான ரோஜாவே 2:

ஏற்கனவே, ஈரமான ரோஜாவே சீரியலின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்துடன் இரண்டாம் பாகத்தை ஒளிபரப்பினார்கள். இதில் திரவியம், சித்தார்த், கேப்ரில்லா, ஸ்வாதி என பல நடிகர்கள் நடித்தார்கள். இந்த தொடரும் ஆரம்பித்த நாளில் இருந்து முடியும் வரை பல திருப்பங்களுடன்,விறுவிறுப்பாக சென்றது. இந்த சீரியலில் காவியா கதாபாத்திரத்தின் மூலம் கேப்ரில்லா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சன் டிவிக்கு என்ற கேப்ரில்லா:

மேலும், இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் முடிவடைந்தது. இதனை அடுத்து கேப்ரில்லா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் கமிட் ஆகுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். இந்த நிலையில் கேப்ரில்லா சன் டிவிக்கு தாவி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புது சீரியலில் கதாநாயகியாக கமிட் ஆகி இருக்கிறார். இந்த சீரியலை வானத்தைப்போல தொடரை தயாரித்து வரும் நிறுவனம் தான் தயாரிக்கிறது.

புது சீரியல் குறித்த தகவல்:

இந்த சீரியலுக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இன்று காலை இந்த சீரியலுடைய முதல்நாள் சூட் தொடங்கப்பட்டிருக்கிறது. சீரியலில் இவருக்கு ஜோடியாக நந்தினி, கண்ணே கலைமானே தொடர்களில் ஹீரோவாக நடித்த ராகுல் ரவி நடிக்கிறார். மேலும், இந்த சீரியல் தொடர்பான பூஜையில் ராகுல் ரவி, கேப்ரில்லாவுடன் சீரியலில் நடிக்கும் சில நடிகர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது இந்த தகவல் வெளியானாதை தொடர்ந்து கேப்ரில்லாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சீரியல் குறித்த அப்டேட்டுகளை கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.

Advertisement