நாயகி இல்லாமல் முடிந்த கிழக்கு வாசல் சீரியலின் கடைசி நாள் ஷூட் – ரேஷ்மா சொன்ன காரணம்

0
166
- Advertisement -

கிழக்கு வாசல் சீரியலின் கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் கிழக்கு வாசல் என்ற சீரியல் ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த சீரியலை ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் தயாரிக்கிறது.

-விளம்பரம்-

இந்த கிழக்கு வாசல் சீரியலில் ஹீரோவாக நடிக்க முதலில் சஞ்சீவ் ஒப்பந்தமானார். அதற்காக சீரியலுக்கு போடப்பட்ட பூஜையில் கூட சஞ்சீவ் கலந்து இருந்தார். அதற்கு பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை திடீரென்று சீரியலை விட்டு சஞ்சீவ் விலகிவிட்டார். அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் வெங்கட் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர்களுடன் இந்த சீரியலில் ரேஷ்மா, தினேஷ், எஸ்.ஏ சந்திரசேகர், அருண் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

- Advertisement -

கிழக்கு வாசல் சீரியல்:

மேலும், இந்த சீரியல் நடிகர் விசுவின் நடிப்பில் வெளிவந்த சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டது என்று பலரும் கூறினார்கள். இந்த தொடர் தொடங்கி சில மாதங்கள் கடந்து இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு டிஆர்பி ரேட்டிங் வரவில்லை. இதனால் சில வாரங்களிலேயே இந்த சீரியலுடைய இயக்குனர் மனோஜை மாற்றிவிட்டு தற்போது அவருக்கு பதில் நீராவி பாண்டியன் என்பவர் தொடரை இயக்கிக் கொண்டு வருகிறார்.

சீரியல் குறித்த தகவல்:

இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இந்த சீரியலின் டைமிங் மாற்றி இருந்தார்கள். இதற்கிடையில் சீரியலில் இருந்து சில நடிகர்கள் விலகி விட்டார்கள். இருந்தும் சீரியலில் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும், இந்த சீரியல் தொடங்கி எட்டு மாதம் கூட ஆகவில்லை. சொல்லப்போனால், 200 எபிசோடு கூட வரவில்லை. அதற்குள்ளே இந்த சீரியலை அவசர அவசரமாக விஜய் டிவி முடிக்க இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சீரியல் கடைசி நாள் ஷூட்டிங்:

இந்த நிலையில் சமீபத்தில் தான் கிழக்கு வாசல் சீரியலுடைய கிளைமாக்ஸ் காட்சி ஷூட்டிங் நடந்து முடிந்தது. அதனுடைய போட்டோ வெளியாகியிருக்கிறது. அதில் ரேஷ்மாவே இல்லை. இது குறித்து ரசிகர்கள் பலருமே கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் ரேஷ்மா ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக வராததனால் தான் சீரியலை அவசரமாக முடிக்கிறார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கிண்டல் அடித்திருந்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக ரேஷ்மா விளக்கம் ஒன்று கொடுத்திருக்கிறார்.

ரேஷ்மா கொடுத்த விளக்கம்:

அதில் அவர், எனக்கு ஒரு மாதமாக உடல்நிலை சரியில்லை. அதனால் தான் என்னால் நடிக்க முடியவில்லை. அதோட என்னுடைய கதாபாத்திரத்திற்கு கொஞ்ச நாட்கள் ஆகவே முக்கியத்துவம் பெரிதாக இல்லை. இருந்தாலும், இந்த சீரியலில் நடித்த என் அனுபவம் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒன்று என்று பதிவிட்டு இருக்கிறார். தற்போது இவரின் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement