TTFஐ தொடர்ந்து பைக் ஓட்டி வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய புகழ் – ரசிகர்கள் கமெண்ட்ஸ்.

0
395
pugazh
- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். இவர் கடலூரை சேர்ந்தவர். வெறும் ஐநூறு ரூபாயை வைத்துக்கொண்டு சென்னைக்கு வேலை தேடி வந்தார். முதலில் மெக்கானிக் கடையில் வேலை செய்த இவர் தொடர்ந்து பல கடையில் வேலை செய்து இருக்கிறார். பிறகு 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். கடந்த இரண்டு சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் சபாபதி என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய் படத்தில் புகழ் நடித்திருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ஜெய்லர் படத்தில் ரஜினி மகளாக நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்ணிடம் 10 லட்சம் மோசடி.

படங்களில் பிஸியான புகழ் :

இதனைத் தொடர்ந்து புகழ் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இறுதியாக அஜித்தின் வலிமை, அருண் விஜயின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் புகழ் நடித்துஇருந்தார் புகழ். சமீபத்தில் தான் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியது. தற்போது படங்களில் பிசியாக நடித்து வருவதால் அவ்வப்போது மட்டும் வந்து சென்று வருகிறார் புகழ்.

-விளம்பரம்-

சமீபத்தில் திருமணம் முடித்த புகழ் :

சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் கூட முடிந்தது. இவர்கள் திருமணம் இந்து முறைப்படியும் இஸ்லாம் முறைப்படியும் நடந்து இருந்தது. ஆனால், ஓராண்டிற்கு தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளராக ராமகிருஷ்ணன் என்பவரின் தலைமையில் புகழ் – பென்சி இருவரும் சுயமரியாதை முறைப்படி ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டு இருந்தார். இதனால் ’ஒருபுறம் சுயமரியாதைத் திருமணம், இன்னொரு பக்கம் கோயிலில் திருமணமா’ என சிலர் விமர்சனம் செய்து இருந்தனர்.

பைக் ஒட்டி சர்ச்சையில் சிக்கி இருக்கும் புகழ் :

இப்படி ஒரு நிலையில் ‘என் தந்தையின் அன்பிற்காக ஒரு முறை. தாய் அன்பிற்காக ஒருமுறை. என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒரு முறை (பென்சியா இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்) என் மீது அன்பு செலுத்தும் வேறு எந்த அன்பு உள்ளங்களாவது ஆசைப்பட்டால் அவர்களூக்காக இன்னொரு முறையும் தயார் என’ விமர்சங்களுக்கு என்று பதிலடி கொடுத்து இருந்தார். இந்த நிலையில் இவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் பைக் ஓட்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

ரசிகர்கள் கமெண்ட்ஸ் :

அதில் ஹெல்மெட் அணியாமல் இரண்டு கைகளைவிட்டு ஓட்டி சென்று இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர் மீதும் வழக்க தொடர வேண்டும் என்று கமெண்ட்களை போட்டு வருகின்றனர். அதேபோல இவரது ரசிகர்கள் பலரும் ஹெல்மெட் அணிந்து வண்டி ஓட்டும்படியும் இவ்வாறு கையை விட்டு வண்டி ஓட்ட வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். மேலும், சிலரோ TTF வாசனுக்கு ஒரு சட்டம் இவருக்கு ஒரு சட்டமாக இவரையும் கைது செய்யுங்க என்று கமண்ட் போட்டு வருகின்றனர். சென்னை ட்ராபிக் போலீசை கமண்ட்டில் குறிப்பிட்டு வருகின்றனர்.

Advertisement