ராஜராஜ சோழன் குறித்து வெற்றிமாறன் சொன்ன கருத்து – சீமான் என்ன சொல்லியுள்ளார் பாருங்க. வீடியோ இதோ.

0
190
seeman
- Advertisement -

ராஜ ராஜ சோழன் குறித்து வெற்றிமாறன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது அவருக்குஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் குரல் கொடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவானதில் இருந்து ராஜராஜ சோழன் பற்றிய கருத்துக்களும் அவர் எந்த மதத்தை சார்ந்தவர் போன்ற விவாதங்களும் சமூக வலைதளத்தில் அடிக்கடி நடந்து கொண்டு வருகிறது. சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் 60-வது பிறந்த நாளை அவருடைய கட்சியினர் கொண்டாடி இருந்தார்கள். இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் வெற்றிமாறன் கலந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

அப்போது பேசிய அவர் ‘சினிமா என்பது வெகுமக்களை மிக எளிய மக்களை சென்றடைய கூடிய ஒரு கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிகவும் முக்கியம். திராவிடம் சினிமாவை கையில் எடுக்கும் போது கலை கலைக்காக மட்டுமே இருக்க வேண்டும் என்று நிறைய பேசினார்கள். ஆனால், மக்களில் இருந்து விலகி எந்த கலையும் முழுமை அடையாது. மக்களுக்காக தான் கலை மக்களை பிரதிபலிப்பது தான் கலை.

- Advertisement -

திருவள்ளுவர் மற்றும் ராஜ ராஜ சோழன் :

இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும். ஒருவேளை நாம் இன்று அதை தவறினால் ரொம்ப சீக்கிரமாக நிறைய அடையாளங்களை இழந்து விடுவோம். வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்படுவதாக இருக்கட்டும் ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக்குவது இருக்கட்டும் என்று பல அடையாளங்களை நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இது சினிமாவிலும் நடக்கும்.சினிமாவிடம் இப்படி தொடர்ந்து அடையாளங்களை எடுக்கிறார்கள்.

ஆதரவும் எதிர்ப்பு :

இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும் என்று பேசி இருந்தார். வெற்றிமாறனின் இந்த பேச்சுக்கு ஆதரவு ஒரு பக்கமும் எதிர்ப்புகள் ஒரு பக்கமும் வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட இயக்குனர் பேரரசு வெற்றிமாறனின் இந்த கருத்திற்கு தன்னுடைய கண்டனத்தை தெரிவித்ததோடு ராஜராஜ சோழன் இந்து அல்லாமல் அவர் என்ன முஸ்லிமா இல்லை கிறிஸ்துவரா என்றும் கேள்வி எழுப்பு இருந்தார்.

-விளம்பரம்-

வெற்றிமாறன் கருத்துக்கு சீமான் ஆதரவு :

இப்படி ஒரு நிலையில் வெற்றிமாறனின் கருத்தை தான் ஆதரிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேசியிருக்கிறார்.தம்பி வெற்றிமாறன் கூறியது உண்மைதான். ஒரு குறிப்பிட்ட சமூகத்திடமிருந்த திரைக்கலையைப் பொதுமைப்படுத்தியது அன்றிருந்த திராவிட இயக்கங்கள் தான். அன்றைய திராவிடத் தலைவர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ஐயா எம்.ஜி.ஆர் போன்றவர்கள் திரைப்படத் துறையில் தான் பணியாற்றினார்கள். அதனால், தம்பி அவ்வாறு குறிப்பிடுகிறார்.

இந்திய நாடும் இல்லை, இந்து மதமும் இல்லை :

எங்களுடைய பெரும்பாட்டன் அருண்மொழிச்சோழனை இந்து மன்னன் என்று பேசுவதெல்லாம் ஒரு வகையான வேடிக்கை தான். வள்ளுவருக்குக் காவிச் சாயம் பூசி, அவரை ஆரியம் தன்வயப்படுத்திக் கொள்ள நினைப்பதைப் போல, ராஜராஜ சோழனையும் தன்வயப்படுத்தும் முயற்சி தான் அது. அந்தக் காலத்தில் இந்திய நாடும் இல்லை, இந்து மதமும் இல்லை என்பது உலகத்திற்கே தெரியும், ராஜராஜ சோழன் என்ற மன்னன் சிவனை வழிபட்ட சைவ மரபினன் என்பது. பன்னிரு திருமறைகளைக் கறையான் அரிக்காமல் காப்பாற்றிக் கொடுத்தவர், அவர் தான். ‘ஏடு தந்தானடி தில்லையிலே’ என்ற பாடலெல்லாம் அதனால் தான் பாடப்பட்டது.

Advertisement