திருமணம் முதல் மகளின் முதல் மொட்டை வரை – குலதெய்வ கோவிலை மறவாத புகழ்.

0
433
- Advertisement -

குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு புகழ் சென்றிருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற காமெடி நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-
pugazh

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். கடந்த இரண்டு சீசன்களிலும் புகழுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவானது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. அதிலும் 1947 படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

புகழ் குறித்த தகவல்:

மேலும், ஒரு சில படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் புகழ், பேன்ஸி என்பவரை 5 வருடங்களாக காதலித்து வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய புகழ், பல வருடமாக நாங்கள் காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ஆடிஷன் போகும்போது இருந்தே தெரியும். அவர் பெயர் பென்சி. நாங்கள் இந்த வருடம் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம்.

புகழ் திருமணம் :

கூடிய விரைவில் எங்கள் கல்யாணத்தைப் பற்றி சொல்கிறோம் என்று கூறி இருந்தார். இதனால் இவர்கள் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலரும் எதிர்பாத்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது திருமணத்தை முடித்தார் புகழ். திருமணத்திற்கு பின்னரும் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து அசத்தி இருந்தார். இப்படி ஒரு நிலையில் புகழ் மனைவி பேன்ஸி கர்ப்பமாக இருந்தார்.

-விளம்பரம்-

புகழ் குழந்தை:

அது தொடர்பான புகைப்படம் எல்லாம் வெளியாகி இருந்தது. அதற்கு பின் புகழுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதற்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி இருந்தார்கள். இந்நிலையில் புகழ் குடும்பத்துடன் குலதெய்வ கோயிலுக்கு சென்று இருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோயில் தான் இவர்களுடைய குலதெய்வம். இந்த கோயிலில் தான் புகழ்- பென்சியோட திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

புகழ் வீட்டு விசேஷம்:

அதற்குப்பின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை இவர்கள் சென்னையில் சிறப்பாக நடத்தி இருந்தார்கள். தற்போது குழந்தைக்கு பூ முடி எடுக்கும் நிகழ்விற்காக புகழ் தன்னுடைய குடும்பத்துடன் தீவனூரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு மீண்டும் சென்று இருக்கிறார். கோவிலில் பொங்கல் வைத்து குழந்தைக்கு பூ முடி எடுத்து சாமி தரிசனம் செய்திருக்கிறார். தற்போது குடும்பத்துடன் புகழ் சாமி கும்பிட்டு இருக்கும் புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலருமே வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement