ஆடை பட இயக்குனர் உட்பட பல பேரை நம்பி ஏமாந்தார் – அமலா பால் குறித்து மனம் திறந்த பிரபலம்.

0
590
AmalaPaul
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக அமலா பால் திகழ்கிறார். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதமரா என்ற மலையாளப் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். பின் தமிழில் இவர் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது மைனா படம் தான். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இதனை அடுத்து இவர் தெய்வ திருமகள் தலைவா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். இந்த படங்களின் போது தான் அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் நடந்தது. திருமணம் ஆகி மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது.

- Advertisement -

அதன் பின் இயக்குனர் விஜய் ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற செய்திகளும் கிசுகிசுக்கப்பட்டு வந்த வண்ணம் இருந்தது. ஆனால், அமலா அதை கண்டு கொள்ளாமல் தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். பிரிவிற்கு பிறகு அமலா பால் தன்னுடைய கேரியரில் மட்டுமில்லாமல் வெளிநாடு மற்றும் பல இடங்களுக்கு சுற்றுலாவும் சென்றிருந்தார்.

மேலும், சமீபத்தில் அமலாபாலின் நெருங்கிய நண்பரான ஜனா தேசாய் என்பவர் அமலாவுக்கு லவ் புரோபோஸ் செய்து இருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலாகி இருந்தது. பலரும் இது குறித்து உண்மையா என்று கேள்வி கேட்டு இருந்தார்கள். அதோடு அமலா பால் தன் நண்பர் ஜனா தேசாய் செய்த புரோபோஸை ஏற்று கொண்டார். பின் ப்ரொபோஸ் செய்த 10 நாளில் அமலா பால்-ஜனா தேசாய் திருமணம் நடந்து இருக்கிறது.

-விளம்பரம்-

இவர்களுடைய திருமணம் கொச்சியில் உள்ள நட்சத்திரம் ஹோட்டலில் நடந்தது. இது தொடர்பாக அமலா பால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில் பிரபலம் ஒருவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அமலாபால் வாழ்க்கை குறித்து கூறியது, அமலா பால்- இயக்குனர் ஏஎல் விஜய் உடன் விவாகரத்து போது விரக்தியில் இருந்தார். அதுமட்டுமில்லாமல் அவருடைய வாழ்க்கையில் சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டங்கள் வந்தது. அதேபோல் அமலாபால் பாரபட்சமில்லாமல் எல்லோரிடமும் நல்ல முறையில் தான் பேசி பழகக் கூடியவர்.

அமலாபால் இயக்குனர் விஜயை காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அதற்கு பிறகு அவருடைய வாழ்க்கையில் சுதந்திரமே இல்லை. அவர் செய்த சில தவறுகளை சுட்டிக்காட்டி அவரை நோகடித்துக் கொண்டே இருந்தார். இதனால்தான் அவர் விவாகரத்து செய்து கொண்டார். அதற்கு பின் இரண்டாவது திருமணத்தையும் நல்ல முறையில் காதலித்து செய்து கொள்ள வேண்டும் என்று அமலா நினைத்தார். அதேபோல் ஆடை படத்தில் நடித்தால் நீங்கள் உச்சத்தில் போய்விடுவீர்கள் என்று கூறி நம்ப வைத்து அவரை அந்த படத்தில் நடிக்க வைத்தார்கள். இப்படி தொடர்ந்து பலரை நம்பி நம்பி ஏமாந்து மனம் உடைந்து இருந்தார். அப்போது தான் அவருடைய காதலன் வந்தார். தற்போது இவர்களுக்கு திருமணம் ஆகி இருக்கிறது. இதன் மூலமாவது அமலா வாழ்க்கை நன்றாக இருக்கட்டும் என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Advertisement