விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பானது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் இருந்தது.
அதோடு இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு சோசியல் மீடியாவில் வைரல் ஆனதற்கு முக்கிய காரணம் புகழ். மேலும், இந்த நிகழ்ச்சியை புகழுக்காகவே பார்க்கின்ற ஒரு கும்பலும் சோசியல் மீடியாவில் உள்ளது. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் இவர் பல படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். மேலும், பல்வேரு கடை திறப்பு விழாவிற்கு சென்று வருகிறார். டுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது.
இதையும் பாருங்க : அஜித் ஓட்டிய பைக்கை வித்து தான் வீட்டு வாடகை கட்டினேன் – தீனா படதில் அடியாளாக நடித்த பிரபல நடிகர் பேட்டி.
ஆனால், கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்து வருவதால் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இருப்பினும் சமூக இடைவெளியை கடைப்பிடத்தல், முகக்கவசம் அணிவித்தல் போன்றவைகள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு உள்ளது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கடை திறப்பு விழாவிற்கு சென்ற புகழால் கடை உரிமையாளர் சிக்கலை சந்தித்து இருக்கிறார்.
கடந்த 15ம் தேதியன்று தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரின் ரெடிமேட் ஃபேஷன் ஸ்டோர் ஒன்றை திறப்பதற்காக புகழ் சென்று உள்ளார். அன்றைய தினம் காலையில் திறப்பு விழாவிற்கு புகழ் வருவதையறிந்து கூட்டம் அந்தக் கடை முன்பாகத் திரண்டுவிட்டது. இதைக்கண்ட புகழ் சமூக இடைவெளி பின்பற்றாததையறிந்து ஃபேஷன் ஷோரூமைத் திறந்து வைத்து விட்டு வேகமாகக் கிளம்பிவிட்டார்.
இதனிடையே இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை கண்காணித்த நகராட்சி அதிகாரிகள் சமூக இடைவெளி பின்பற்றாமலும் முன் அனுமதி பெறாமல் கூட்டம் சேர்ந்ததற்கு காரணமான கடை அதிபர் மீது அபராதம் தீட்டிவிட்டனர். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் இதே போல புகழ் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்ற போது கூட்டம் கூடியதால் அந்த கடைக்கே சீல் வைக்கப்பட்டது என்பது கூறிபிடத்தக்கது.