டேஞ்சர் சோனில் வந்த இரண்டு பேர் – குக்கு வித் கோமாளியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.

0
500
Rajayyapan
- Advertisement -

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று சீசன்களாக ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது.முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மூன்று சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சி டாப் ரேட்டிங்கில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4வது சீசன் ஒளிபரப்ப தொடங்கி விட்டனர்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த சீசன் போல இல்லாமல் இந்த சீசன் பல புதிய கோமாளிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். ஏனெற்றால் கடந்த குக் வித் கோமாளி சீசன் 3 மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்ததை அடுத்து அதில் இருந்த புகழ், KPY பாலா, சிவாங்கி போன்றவர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து திரைப்படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகின்றனர். இருப்பினும் இவர்கள் தற்போதும் குக்கு வித் கோமாளியில் கலந்துகொண்டனர்.

அதில் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், சின்னத்திரை நடிகையான ரவீனா தாகா, சுனிதா, மோனிஷா, மணிமேகலை உள்ளிட்டோர் புதிய கோமாளிகளாக கலந்து கொண்டனர். இதில் ஓட்டேரி சிவா மற்றும் மணிமேகலை இருவரும் இந்த சீசனில் இருந்து வெளியேறிவிட்டனர். மேலும், இந்த சீசனில் குக்குகுகளாக ஷெரின், விசித்ரா, அஜித் பட நடிகர் ராஜா ஐயப்பா, பாக்கியலட்சுமி சீரியல் தொடர் ஹீரோ விஜே விஷால், காளையன், மைம் கோபி, நாய் சேகர் இயக்குனர் கிஷோர் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்துகொண்டனர்.

-விளம்பரம்-

அதிலும் கோமாளியாக இருந்த ஷிவாங்கி இந்த சீஸனின் குக்காக என்ட்ரி கொடுத்த ஆச்சரியப்பட வைத்தார். இதற்காக தனியாக சிறப்பு கோர்ஸ் எல்லாம் முடித்து வந்துள்ளார். இந்த சீசனில் முதல் எலிமினேஷனில் கிஷோர் வெளியேறினார். இதனை தொடர்ந்து எலிமினேஷன் இல்லாமல் சென்று கொண்டு இருந்த நிலையில் இந்த வாரம் மூன்றாம் நாமிநேஷன் நடைபெற்றது. இதில் டேஞ்சர் சோனில் ஷெரின் மற்றும் ராஜ் ஐயப்பன் வந்து இருந்தனர்.

இப்படி ஒரு நிலையில் இந்த வாரம் ராஜ் ஐயப்பன் வெளியேற்றப்பட்டார். ராஜ் அய்யப்பா எலிமினேட் என நடுவர்கள் கூறியவுடன், புகழ், சுனிதா மற்றும் சில கண்கலங்கினார்கள். அதே குக் வித் கோமாளி மூலம் தனக்கு கிடைத்த விஷயங்கள் குறித்தும் ராஜ் அய்யப்பா பகிர்ந்துகொண்டார். மீண்டும் வைல்ட் கார்ட் சுற்றில் அனைவரையும் சந்திக்கிறேன் என கூறிவிட்டு விடைபெற்று சென்றார் ராஜ் அய்யப்பா.

Advertisement