‘குழந்தை இல்லாதவங்க கிட்ட போய் கேட்டு பாருங்க’ – தன் பேச்சை கேலி செய்த meme creatorகளுக்கு பத்தின் உருக்கமான பதிவு.

0
560
Venkatesh
- Advertisement -

சமீபத்தில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பத் பேசிய பேச்சு பெரும் கேலிக்கு உள்ளான நிலையில் தற்போது இதற்கு விளக்கமளித்துள்ளார் பத். அனைவரும் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கோலாகலமாக சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மாறினாலும் கடந்த 3 சீசன்களாக மாறாமல் இருப்பது இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் தான். கடந்த மூன்று சீசன்களாக இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பத் தான் இருந்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் அப்பாவி பெண் போல இருந்த நடிகையா இது – வைரலாகும் புகைப்படங்கள்.

- Advertisement -

பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி :

இவர்கள் இருவருமே ஏற்கனவே பல டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர். இவர்கள் இருவமே கோமாளிகளை ஒரு வழி செய்து விடுவார்கள் அதிலும் வெங்கடேஷ் பத் கோமாளிகளை வச்சி செய்து விடுவார்.குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சி ரசிகர்களின் stress Bustarஆக இருக்கிறது என்பது மறுக்க முடியாத ஒரு விஷயம் தான்.

சர்ச்சைக்கு உள்ளான பத்தின் பேச்சு :

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு பெண் ஒருவர் கர்பமானதாக வெங்கடேஷ் பத் பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்திய எபிசோட் ஒன்றில் பேசிய பத் ‘சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஒரு பெண் இந்நிகழ்ச்சி பார்த்து கர்ப்பமானதாக கூறினார். அதாவது இது அவ்வளவு ஜாலியாக டென்ஷனை குறைக்கும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதாக கூறினார். அதே போல புகழ் பேசுகையில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த ஒரு நபர் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவை பார்த்துவிட்டு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தையே விட்டுவிட்டார் என்றும் கூறி இருக்கிறார்.

-விளம்பரம்-

கேலி செய்த Meme Creatorகள் :

இதனால் பத் பேசிய இந்த வீடியோவை பலரும் கலாய்த்தனர். இப்படி ஒரு நிலையில் இதற்கு விளக்கம் தெரிவிக்கும் வகையில் வெங்கடேஷ் பத் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘கடந்த இரண்டு தினங்களாக நான் மிகவும் வருத்தத்துடன் உடைந்து போய் இருக்கிறேன். என்னை கேலி செய்தார்கள் என்பதற்காக அல்ல. ஆனால், ஒரு சில மீம்களை பார்க்கும்போது மனிதம் செத்துவிட்டது என்று எண்ணம் வரவைத்து விட்டது. எது வேண்டுமானாலும் இறக்கலாம் ஆனால் மனிதன் இருக்காது.

வெங்கடேஷ் பத் விளக்கம் :

ஆனால், கடவுள் இருக்கிறார் குமாரு சந்திரமுகி படம் மாதிரி இரண்டு நாள் அண்ணன்ங்க ஆட்டம் இருந்தது. குழந்தை செல்வம் உள்ளவர்களுக்கே தெரியும், எவ்வளவு பெரிய பாக்கியம் என்று. அப்படி என்றால் இல்லாதவர்களை யோசித்துப் பாருங்கள். எனக்காக அல்ல உயிரை சுமக்கும் பெண்ணுக்காக கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து என்னை கிண்டல் செய்வதாக எண்ணி உங்களை தரம் தாழ்த்திக் கொள்ளாதீர்கள் எனக்கும் மணமுடித்து ஏழு ஆண்டுகள் கழித்து கிடைத்த செல்வம் என் குழந்தை ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் ஆனதை நான் உணர்ந்தேன்’ என்று உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement