தனிமைபடுத்தப்பட்ட கமல், ஒட்டப்பட்ட ஸ்டிக்கர். மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை.

0
3133
kamal
- Advertisement -

கடந்த சில மாதமாக நாடு முழுதும் கொரோனா வைரஸால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் பாதிப்பு தற்போது பல்வேறு உலக நாடுகளை பதித்துள்ளது. பி;உலகின் பெரிய நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற பல நாடுகளை இந்த கொரோனா தோற்று பெரிதும் பாதித்துள்ளது. இதில் அமெரிக்காவில் தான் உலகளவில் கொரோனாவால் பாதிக்கபட்ட நபர்களின் அதிக எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

-விளம்பரம்-
கமல்ஹாசன் வீட்டில் அத்துமீறி ...

இந்தியாவை பொருத்த வரை இதுவரை இதுவரை 873 பேர் இந்த நோயினால் பாதிக்கப்ட்டுள்ளார்கள். அதில் 775 சிகிச்சை பெற்று வரும் நிலையில் 78 பேர் இந்த நோயில் இருந்து மீண்டு வந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் இந்த கொடிய நோயினால் 19 பேர் உயிரிழந்துள்ளார்கள். தமிழகத்தில் பொறுத்தவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 35ஐ தாண்டியுள்ளது. ஏற்கெனவே கொரோனா தொற்றுடன் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம், மொத்தமாக 9 பேருக்கு தொற்று பரவியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் பாருங்க : இந்த வயது குழந்தை வரை கொரோனா பாதிப்பது கஷ்டம். ஆறுதல் தகவல் சொன்ன மருத்துவர் அஸ்வின்.

- Advertisement -

லும், இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது இதனால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியர்களை வீடுகளை அடையாளம் காண மாநகராட்சியால் வீட்டின் வெளியே தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீஸ் செய்யும் ஓட்டி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல் வீட்டின் முன்பு தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

kamalcorona

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டின் முன்பு இன்று தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது பொதுவாக மார்ச் 1 முதல் வெளிநாட்டு பயணம் செய்தவர்கள் வீட்டின் முன்னர்தான் இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படும். ஆனால், மார்ச் 1 முதல் கமல் இந்தியன்2 படப்பிடிப்பிற்காக இந்தியாவில் தான் இருந்து வந்தார். இப்படி இருக்க எப்படி கமல் வீட்டின் முன்பு இப்படி ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. ஆனால், இந்த ஸ்டிக்கரை மாநகராட்சி ஒட்டவில்லை என்று தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-

பீதியை கிளப்ப வேண்டும் என்று யாரோ ஒருவர் இப்படி ஒரு ஸ்டிக்கரை கமல் வீட்டின் முன்பு ஓட்டியிருக்கிறார். இந்த செய்தி வெளியான சில மணி நேரத்திலேயே அந்த ஸ்டிக்கரை சென்னை மாநகராட்சி அகற்றி உள்ளது. மேலும், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமலின் வீட்டில் தற்போது யாருமே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் கமல் தனது ஆழ்வார்பேட்டை வீட்டை மருத்துவமனையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement