இந்த வயது குழந்தை வரை கொரோனா பாதிப்பது கஷ்டம். ஆறுதல் தகவல் சொன்ன மருத்துவர் அஸ்வின்.

0
9620
aswin
- Advertisement -

சர்வதேச அளவில் இந்த கொரோனா வைரஸை ஒழிக்க பல்வேறு முயற்சிகளை தீவிரமாக செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் இந்த கொரோனா வைரசினால் 24 ஆயிரத்திற்கும் மேல் பலியாகியுள்ளனர். சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் அரசாங்கம் சொல்லும் அறிவுரைகள் படி நடந்தாலே போதும் இந்த கொரோனவை முற்றிலும் ஒழித்து விடலாம். மேலும், சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை வீடியோக்கள் வந்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் டாக்டர் அஸ்வின் விஜய் அவர்கள் ஒரு கொரோனா வைரஸ் குறித்து சில நல்ல விஷயங்களை கூறி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது,

இதையும் பாருங்க : ஒரே படத்தில் இரண்டு ஹீரோக்களுக்கு டப்பிங் பேசியுள்ள விக்ரம். எந்த படம் தெரியுமா ?

- Advertisement -

இந்த நிலையில் அரசாங்கம் சொல்லும் அறிவுரைகள் படி நடந்தாலே போதும் இந்த கொரோனவை முற்றிலும் ஒழித்து விடலாம். மேலும், சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை வீடியோக்கள் வந்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் டாக்டர் அஸ்வின் விஜய் அவர்கள் ஒரு கொரோனா வைரஸ் குறித்து சில நல்ல விஷயங்களை கூறி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது,

Dr Ashwin Vijay: Parents should focus on self-care to raise happy ...

-விளம்பரம்-

கொரோனவினால் அதிக உயிர் இழப்புகள் கொண்ட நாடு இத்தாலி தான். ஏன்னா, அங்கு உள்ள மக்கள் அரசாங்கம் சொல்லும் நடவடிக்கைகளும், முன்னெச்சரிக்கைகளையும் கவனிக்காமல் விட்டது தான் இந்த அளவிற்கு உயிரிழப்பு ஏற்பட்டதற்கு காரணம்.இந்த சமயங்களில் அனைவரும் ஹாலிடே என்று வெளியில் சுற்றுவது, தெருக்களில் நின்று கூட்டம் கூட்டமாக பேசுவது. இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களில் இருக்கிற நிலைமையைப் பெரிதாக்கி விடாதீர்கள்.

இந்த வியாதி என்பது வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மட்டும் தான் வரும் என்பது இல்லை. யாருக்கு வேண்ணாலும் இந்த தொற்று பரவும். அதனால் அனைவரும் அரசாங்கம் சொல்வதை தீவிரமாக கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். அனைவரும் வீட்டுக்குள்ளேயே பத்திரமாக இருங்கள். குழந்தைகளுக்கு எல்லாருக்கும் இந்த கொரோனா வந்துருமா என்று பதட்ட படாதிர்கள். கொரோனா வந்தால் யாரும்இறக்கமாட்டர்கள். எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் தான் இறக்க நேரிடும்.

தயவுசெய்து அதை புரிந்து கொள்ளுங்கள். காய்ச்சல், இருமல், சளி தான் வரும். குழந்தைகளின் போன் மரோனில் நடக்கும் கெமிக்கல் ரியாக்சனால் வைரஸ் உள்ளே நுழையும் போது அழிந்து விடும். அதனால் ஜீரோ– ரெண்டு வயசுல உள்ள குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் வருவது ரொம்ப கஷ்டம். அதனால் பெற்றோர்கள் பயப்படாதீர்கள். நீங்கள் பொறுப்பாகவும், கவனமாகவும் இருந்தால் இதை தவிர்த்து விடலாம். குழந்தைகள் இருக்கிறவர்கள் பயப்படாதீர்கள். தயவுசெய்து 21 நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருங்கள் என்று கூறினார்.

இதற்கு முன்னாடியே உலக அளவில் அதிர வைத்த இரண்டு வியாதிகளை இந்தியா எதிர்கொண்டு ஒழித்தது. ஒன்று சின்னம்மை, இன்னொன்று போலியோ. இந்த இரண்டு நோய்களையும் இந்தியா எதிர்த்துப் போராடி அழித்தது. அதே போல் இந்த கொரோனாவையும் இந்தியா இந்த 21 நாட்களில் அழிக்கும். இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆகவே தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். அதோடு சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். பிரபலங்களும் தங்களால் முடிந்த பண உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் குறித்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர். தமிழக்தில் இதுவரை 35 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், அதிக காய்ச்சல், அதிக இருமல், மூச்சுத்திணறல் இவையெல்லாம் தான் கொரோனா வைரஸின் அறிகுறிகள் என்று சொல்லப்படுகிறது. அதனால் இந்த அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

Advertisement