கோலிவுடில் சிறந்த நட்சத்திர சம்பாதிக்களாக திகழ்ந்தவர்கள் நடிகர் விஜய் -சங்கீதா. இவர்களுக்கு திருமணம் ஆகி 25 ஆண்டு காலமாக ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். சினிமா துறையில் மாஸ் காட்டிய தளபதி விஜயின் தீவிர ரசிகைதான் சங்கீதா. விஜயன் தீவிர ரசிகையான சங்கீதா, விஜயை சந்திப்பதற்காக சென்னைக்கு வந்து விஜய் பெற்றோர்களையும் சந்தித்திருந்தார். அதன் பின் இரு வீட்டிலும் பேசி திருமணம் நடந்தது.

வழக்கமாக சங்கீதா எப்போதும் நடிகர் விஜய் படத்தின் பிரமோஷன், இசை வெளியீட்டு விழா என்று எதுவாக இருந்தாலும் வந்து விடுவார். ஆனால், சில ஆண்டுகளாக சங்கீதா விஜய் படத்தின் எந்த விழாவிலும் கலந்து கொள்வதில்லை. குறிப்பாக, முதல்வர் விஜய் தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்னும் கட்சியை அறிவித்து அதற்கான கொடியேற்றும் விழா மற்றும் மாநாடு எல்லாம் நடத்தி இருந்தார். அந்த விழாவில் கூட விஜயின் மனைவி சங்கீதா பங்கேற்கவில்லை.
விஜய்-சங்கீதா குறித்த தகவல்:
இதன் காரணமாகவே இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று சமீப காலமாக சில சர்ச்சைகள் எழுந்தது. தனிப்பட்ட பிரச்சனை காரணமாக தான் விஜய்- சங்கீதா இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது. இதை அடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த விவகாரம் கடந்த பிப்ரவரி மாதம் தான் வெளியில் தெரியவந்தது.

விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு:
ஏப்ரல் 20ம் தேதி இந்த வழக்கினுடைய விசாரணை நடைபெற்றது. அப்போது விஜய்- சங்கீதா தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. பின் இந்த வழக்கை மே 19 ஆம் தேதிக்கு விசாரணைக்கு ஒத்தி வைத்தார்கள். பின் இந்த வழக்கை ஜூன் 15ஆம் தேதியான இன்று ஒத்திவைத்திருந்தார்கள். அதன்படி இன்று விசாரணைக்கு முதல்வர் விஜய் மற்றும் மனைவி சங்கீதா இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏற்கனவே விசாரணையின் போது இரு தரப்பினருமே சம்மன் அனுப்பியதுடன் ஆஜராகவில்லை.

நீதிபதி உத்தரவு:
இருவருமே பொது வெளியில் பிரபலமானவர்கள் என்பதால் நேரில் ஆஜர் ஆவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் இதர சிக்கரங்களை கருத்தில் கொண்டு வீடியோ கான்ஃபரென்சிங் மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இன்றும் விசாரணை நடந்தது. காணொளி காட்சி மூலமாக ஆஜராக மனு தாக்கல் செய்த நிலையில் இன்றைய அமர்வில் இருவருடைய மெயில் ஐடியும் நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்ததோடு இந்த வழக்கை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின் இந்த வழக்கு குடும்ப நல நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. குடும்ப நல நீதிமன்றத்திலும் வழக்கு சம்பந்தமாக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதியும் அறிவுரை கூறியிருக்கிறார்.






