சிவாஜியின் மகன், பேரன் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு – சிவாஜி குடும்பத்தாருக்கு இப்படி ஒரு பிரச்சனையா ?

0
628
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியை யாராலும் மறக்க முடியாது. இவர் 1952ல் பராசக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருந்தார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களுக்கும் மேல் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இன்றும் இவருடைய நடிப்புக்கு யாருமே நிகர் இல்லை என்று தான் சொல்லணும். இவருக்கு சாந்தி, தேன்மொழி என்ற இரண்டு மகள்களும், பிரபு, ராம்குமார் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

-விளம்பரம்-

இந்நிலையில் சிவாஜி மகன் ராம்குமார் மற்றும் சிவாஜியின் பேரன் துஷ்யந்த் இருவரின் மீதும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான “ஜகஜால கில்லாடி” என்ற படத்தை சிவாஜி கணேசன் அவர்களின் பேரன் துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி உள்ளிட்டோர் பங்குதாரகளாக இருந்து வரும் ஈசன் ப்ரொடெக்ஷன் நிறுவனம் தயாரித்தது.

- Advertisement -

இந்நிலையில் “ஜகஜால கில்லாடி” படத்தை எடுப்பதற்க்காக கடன் வழங்க கோரி தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை அணுகியுள்ளார் ஈசன் ப்ரொடெக்ஷன் நிறுவனம். பல்வேறு தவணைகளில் 4 கோடி ருபாய் கடனாக பெற்ற நிலையில் 30 சதவிகிம் வட்டியாகவும். படத்தின் அணைத்து உரிமைகளையும் தங்களுக்கே வழங்க வேண்டும் என்றும், 2018ஆம் ஆண்டிற்குள் படத்தை முடித்து தர வேண்டும் என்றும் ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

ஆனால் ஒப்பந்தத்தின் படி பணத்தை திருப்பி தராத காரணத்தினால் இந்த விவகாரத்தை முடிக்கும் வகையில் சென்னை உயர்நீதி மன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ் அவர்களை நியமிக்க கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் அந்த மனுவில் 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரைல் 5 கோடியே 41 லட்சம் ரூபாய் இருக்கிறது என்றும் ஆனால் 41 லட்சத்து 85ஆயிரம் ருபாய் மட்டுமே வட்டியாக செலுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.

-விளம்பரம்-

மேலும் இது தொடர்பாக பல முறை நோட்டீஸ் அனுப்பியும் அதற்கு சரியான பதிலும் வரவில்லை என்றும், தொடக்கத்தில் கடன் வழங்க கூடாது என்று தான் தாங்கள் இருந்ததாகவும் ஆனால் நடிகர் திலகம் சிவாஜியின் குடும்பம் என்ற நற்பெயரில் நம்பிக்கை வைத்து கடன் கொடுக்கவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, இந்த புகார் குறித்து ஈசன் ப்ரொடெக்ஷன் நிறுவனத்தின் பங்குதாரர்கள் துஷ்யந்த், அபிராமி மற்றும் ராஜ்குமார் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை வரும் மார்ச் 23ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்நிலையில் சிவாஜி மகன் ராம்குமார் மற்றும் சிவாஜியின் பேரன் துஷ்யந்த் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement