ராயல்டி விவகாரம், இளையராஜாவிற்கு எதிராக 3 மியூசிக் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு. நீதி மன்றம் நோட்டீஸ்.

0
506
ilayaraja
- Advertisement -

இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக இந்தியன் ரெக்கார்ட் கம்பெனி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குக்கு நீதிபதிகள் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இசை ஜாம்பவனாக திகழ்பவர் இளையராஜா. ரசிகர்களை பல ஆண்டுகளாக தனது இசையால் கட்டிப்போட்டு வைத்தவர் இசை ஞானி. மேலும், இவர் இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். 1976 ஆம் ஆண்டு இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-
Ilayaraja

இதுவரை இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களுக்கு 1000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், இவர் தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர். இதனால் இவருக்கு இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டது.

- Advertisement -

இளையராஜாவின் திரைப்பயணம்;

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். அதோடு இவர் சில வருடங்களாகவே இசைக்கச்சேரிகள் நடத்துவதில் அதிக ஆக்டிவாக இருக்கிறார். சமீபத்தில் கூட இவர் சென்னையில் இசை கச்சேரி நடத்தி இருந்தார். இதில் தனுஷ் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தகக்து. இந்த நிலையில் இசைஞானி இளையராஜாவுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகள் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்தியன் ரெக்கார்டு நிறுவனம் பதிவிட்ட வழக்கு:

கடந்த 1980 வெளியான 20 தமிழ் படங்கள், ஐந்து தெலுங்கு, 3 கன்னடம்,2 மலையாளம் என மொத்தம் 30 படங்களில் இசை பணிகளை படத்தயாரிப்பில் இடம் பெற்றுள்ளதால் இந்த படங்களின் இசையை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை கோரி இந்தியன் ரெக்கார்டு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த முப்பது படங்களின் இசை இந்தியன் ரெக்கார்டு கம்பெனிக்கு சொந்தமானவை என்று கூறி அவற்றை பயன்படுத்த இளையராஜா மற்றும் இரு மியூசிக் நிறுவனங்களுக்கு தடை விதித்து கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த உத்தரவு போடப்பட்டது.

-விளம்பரம்-

இளையராஜா தரப்பு மனுவில் கூறியது:

இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தனர். அந்த மேல்முறையீட்டு செய்த மனுவில், தயாரிப்பாளருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியன் ரெக்கார்டு நிறுவனத்திற்கு சாதகமான உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும் பட தயாரிப்பாளர்களுக்கு படத்தின் காப்புரிமை மட்டும் உள்ளதாகவும் இசை பணிகளுக்கு அவர்களுக்கு முதல் உரிமையாளர்கள் அல்ல எனவும் கூறி உள்ளார்கள். மேலும், இந்த விவகாரம் வர்த்தகம் சம்பந்தப்பட்டது என்பதால் அது சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க அமர்வு விசாரிக்க வேண்டும்.

நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு:

தனி நீதிபதி அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்றும் மனுவில் தெரிவித்து இருந்தார்கள். ஆகையால் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் அதை ரத்து செய்ய வேண்டும் எனவும் இளையராஜா தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க இந்தியன் ரெக்கார்ட் கம்பெனி உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது: தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement