சமீப காலமாகவே கோலிவுட்டில் கதை திருட்டு பிரச்சனை அதிகமாகிக் கொண்டே போகின்றது. பிரபல இயக்குனர்கள் முதல் புதிதாக வரும் இயக்குனர்கள் வரை அனைவரும் இந்த கதை திருட்டு பிரச்சினையில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில் கதை திருட்டு பிரச்சினையில் சமீபத்தில் மாட்டிக் கொண்டவர் தான் ஹீரோ படம் இயக்குனர் பி.எஸ். மித்ரன். பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் “ஹீரோ”. இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளனர்.
மேலும், இயக்குனர் அட்லி இடம் உதவியாளராக இருந்தவர் போஸ்கோ பிரபு அவர்கள் ஹீரோ படம் என்னுடைய கதை தான் என்றும், இயக்குநர் மித்ரன் அவர்கள் திருடி ஹீரோ படத்தை எடுத்து விட்டார் என்றும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்து இருந்தார். ஹீரோ படம் தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து திரைக்கு வெளியாகும் வரை பல பிரச்சனைகளிலும், சர்ச்சைகளிலும் சிக்கி தான் வந்து கொண்டிருக்கின்றது.
ஹீரோ படம் கதை திருட்டு தான் என்று உண்மையானது. கதை திருடியது உண்மை தான் என்று இயக்குனரும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவருமான கே. பாக்யராஜ் கூறி இருந்தார். அதோடு 18 பேர் கொண்ட குழு பரிசீலனை செய்தது. இறுதியில் மித்ரன் எழுதிய கதையும், போஸ்க்கோ எழுதிய கதையும் ஒப்பிட்டு பார்த்து விசாரணை நடத்தியது.
அதில் போஸ்கோவின் கதையை வைத்து தான் மித்ரன் ஹீரோ படத்தை எடுத்து உள்ளார் என்று ஆதாரத்துடன் இயக்குனர் பாக்கியராஜ் தலைமையில் அறிக்கை வெளியிட்டார்கள். ஆனாலும், இயக்குனர் பி.எஸ்.மித்ரன் அவர்கள் இதை ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு மித்ரன் அவர்கள் இதை சட்டரீதியாக எதிர்த்துக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். சமீபத்தில் தான் இந்த வழக்குக்கு தீர்ப்பு வந்தது.
அது என்னனா, போஸ்கோ கதையை வைத்து தான் மித்ரன் ஹீரோ படத்தை இயக்கினார் என்று சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தினால் 33 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், சன்டிவி மற்றும் அமேசான் போன்றவற்றில் இந்த படத்தை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரபல மீடியாவில் பேசப்பட்டு உள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பது, ஹீரோ படத்தின் தீர்ப்பு வந்தது.
அது போஸ்கோ உடைய கதை தான் என்று சட்டப்படியாக தீர்ப்பு வந்துவிட்டது. இனிமேல் இந்த படத்தை சன் டிவி மற்றும் அமேசான் பிரைம் போன்ற அனைத்திலும் இந்த படம் வெளியிடக்கூடாது என்று அறிவித்துள்ளார்கள். மே மாதம் சன் டிவியில் இந்த படம் தான் வெளியிடுவதாக இருந்தது என்று கூறப்படுகிறது. அமேசான் பிரைம் லிஸ்ட்டிலும் ஹீரோ படம் இருந்திருக்கிறது.
ஆனால், தற்போது அந்த லிஸ்டில் இருந்து ஹீரோ படத்தையும் தூக்கி விட்டார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு தான் பல பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் மூலம் மொத்தம் 33 கோடி அளவில் இந்த படத்தால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இப்போது அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது தயாரிப்பாளர்கள் தான். இயக்குனர்கள் இதை உணர வேண்டும் என்று கூறி உள்ளார்கள்.