பஞ்ச தந்திரம் படத்தில் நடிக்க இவரை தான் முதலில் அனுகினேன். மேடையில் கூறிய கமல்.

0
41921
panjathanthiram
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் பஞ்சதந்திரம். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், தேவயானி, ஜெயராம், நாகேஷ், ஸ்ரீமன், யூகிசேது, மணிவண்ணன், கோவை சரளா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக இருந்தது. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

இந்த படத்தை திரையரங்கில் பார்த்ததை விட டிவியில் பார்த்து ரசித்தவர்கள் தான் அதிகம். தற்போது கூட இந்த படம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பஞ்சதந்திரம் படத்தில் கமலுடன் முதலில் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் நடிப்பதாக இருந்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதை கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் அவர்கள் ரன்வீர் சிங்கின் 83 படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு விழாவில் கூறி உள்ளார்.

இதையும் பாருங்க: நீங்கள் முஸ்லீம், அம்மா இந்து. அப்போ நாங்கள் என்ன மதம். மகளின் கேள்விக்கு ஷாருக்கான் அளித்த பதில். வீடியோ இதோ.

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்கள் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவரும், தற்போதைய இந்திய துடுப்பாட்ட அணியின் தேர்வு குழுவின் தலைவராகவும் உள்ளார். இவர் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு இந்தியாவிற்காக பல முறை வெற்றி வாங்கி தந்து உள்ளார். கபிர் கான் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “83”. இந்த படம் முழுக்க முழுக்க இந்திய கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதை ஆகும்.

வீடியோவில் 4: 32 நிமிடத்திற்கு பின் பார்க்கவும்

-விளம்பரம்-

இந்திய கிரிக்கெட் வீரர் கபில் தேவின் வாழ்க்கைப் பயணத்தையும், அவர் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆனதும், 1983 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பையை வென்றதும் பற்றிய கதையாகும். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிட உள்ளது. இந்த படம் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவித்து உள்ளார்கள். கபில்தேவ் ஆக இந்த படத்தில்ரன்வீர் சிங் நடித்து உள்ளார். ஸ்ரீகாந்த் ஆக ஜீவா நடித்து உள்ளார். இந்த படத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஜீவா, தாஹிர் ராஜ் பாசின், சாகிப் சலீம், ஹார்டி சந்து உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.

Image result for 83 movie launch

இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று தான் வெளியிடப்பட்டது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட கமலஹாசன், கபில்தேவ், ஸ்ரீகாந்த், ரன்வீர் சிங், ஜீவா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள். இதில் ஸ்ரீகாந்த் அவர்கள் தன்னுடைய பழைய நினைவுகளை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியது, கமலஹாசனின் பஞ்சதந்திரம் படத்தில் யூகிசேது கதாபாத்திரத்தில் நடிக்க என்னை தான் கமல் அவர்கள் அணுகினார் என்று கூறினார். பல வருடங்களுக்கு பிறகு இந்த ரகசியத்தை மனம் திறந்து பேசினார் . தற்போது இவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement