சண்டே கலாட்டா நிகழ்ச்சியிலிருந்து விலகிய தேவதர்ஷினி ! காரணம் இதுதான்

0
5180

ஜீ தமிழின் `காமெடி கில்லாடிஸ்’ நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராகக் கலக்கிவருகிறார், பிரபல காமெடி நடிகை தேவதர்ஷினி. தன் சினிமா மற்றும் சின்னத்திரை பயணம் குறித்து உற்சாகமாகப் பேசுகிறார்.

Devadarshini

சண்டே கலாட்டா’ நிகழ்ச்சியிலிருந்து விலகினது ஏன் ?

ஒரு மாற்றத்துக்காக மட்டுமே. என் மீடியா பயணத்தின் ஆரம்பத்திலிருந்து சன் டிவி பக்கபலமா இருக்கு. அங்கே நிறைய சீரியல்கள், நிகழ்ச்சிகள் பண்ணியிருக்கேன். அதில், ‘சண்டே கலாட்டா’ பெரிய மைல்கல். ஒவ்வொரு வாரமும் வெரைட்டியான கான்செப்ட்டுல காமெடி பர்ஃபார்ம் பண்ணினோம். ஆறு வருஷமா 300 எபிசோடுகள் வரை நடிச்சுட்டேன்.

இந்த நீண்ட பயணத்தில் சின்ன பிரேக் எடுத்து, வெரைட்டியா வொர்க் பண்ணினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. பல வாய்ப்புகள் தேடி வந்துச்சு. அப்படித்தான், ‘காமெடி கில்லாடிஸ்’ நடுவர் ஆனேன். சன் டிவி மற்றும் ‘சண்டே கலாட்டா’ நிகழ்ச்சியை மிஸ் பண்ற ஃபீலிங் இருக்கு. நம்ம குடும்ப சேனல்தானே. எப்போ வேணாலும் மறுபடியும் அங்கே வொர்க் பண்ணுவேன்.